அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 10 அக்டோபர், 2009

லால்பேட்டை,அக்.9-
லால்பேட்டையில் த.மு.மு.க.வை சேர்ந்த 3 பேரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இடைத்தேர்தல்
கடலூர் மாவட்டம் லால் பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.தேர்தலில் த.மு.மு.க.வை சேர்ந்த யாசர் அராபத், தேசிய லீக் கட்சியை சேர்ந்த சிராஜுதீன் ஆகிய 2 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இரவு த.மு.மு.க.வை சேர்ந்த முகமது காசிம், முகமது அலி ஆகிய 2 பேரும் லால்பேட்டை கைக்காட்டியில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண் டிருந்தனர்.
கத்திக்குத்து
அப்போது அந்த வழியாக வந்த தேசிய லீக் கட்சியை சேர்ந்த அகமதுல்லா (வயது 39), ஹமிருல்ஹக்(28), அன்சாரி (29), மன்சூர், ரியாஜுல்லா மற்றும் பலர் , முகமது காசிம், முகமது அலி,சித்திக் ஆகியோரை கத்தியால் குத்தினர்.இதில் பலத்த காயமடைந்த முகமது காசிம், முகமது அலி, சித்திக் ஆகிய 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிமருத்துவ மனையில் அனுமதிக்கப் பட் டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் கைது
இது பற்றி முகமது காசிம் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அகமதுல்லா, ஹமிருல்ஹக், அன்சாரி, ரியாஜுல்லா ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் 5 பேரை தேடி வருகிறார்.
இந்த சம்பவத்தையொட்டி மீண்டும் பிரச்சினை நடக்கா மல் இருக்க சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக