அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 14 டிசம்பர், 2009

முத்தப்பேட்டை அல்மஹா பெண்கள் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா


முத்துப்பேட்டையில் அல்மஹா பெண்கள் அரபிக்கல்லூரி கடந்த
இரண்டு ஆண்டுகளாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதில்
முத்தப்பேட்டை அணைத்து சமுதாய பெண்களுக்காக கம்ப்யூட்டர் பயிற்சி,தையல் பயிற்சி,டைப்ரைட்டிங் (தட்டச்சு) பயிற்சி, மற்றும் ஆலிமா வகுப்புகளும் நடைபெற்றுவருகிறது. அதில் ஒரு பகுதியாக இரண்டு ஆண்டுகள் நிறைவுசெய்து ஆலிமா பட்டம் முடித்த மாணவிகளுக்கு அல்மஹா பெண்கள் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இறைவனின் மிகக் கிருபையினால் ஆசாத்நகர் அல்மஹா மதரஸாவில் நடைபெற்றது.




இந்த பட்டமளிப்பு விழா ஆசாத்நகர் ஜூம்ஆ பள்ளியின் முண்ணாள் ஜமாத் தலைவர் சகோ..ஜனாப்.K.Aஷேக்நூர்தீன் அவர்கள் தலைமயிலும்,
தற்போதைய ஜமாத் தலைவர் சகோ.ஜனாப்.B.பகுருதீன்.Bsc., அவர்களும்
சகோ.ஜனாப்.M.Iமுகம்மது அலி (அல்மஹா அறக்கட்டளை) அவர்களும் முன்னிலைவகிக்க சகோதரி.ஆலிமா.K.M.ராஃபியா ரோஷன் (பேராசிரியர்,ஆயிஷா சித்தீகா பெண்கள் அரபிக் கல்லூரி.காயல்பட்டினம்).அவர்கள் துவக்க உரைநிகழ்தினார்கள்.
அதனை தொடர்ந்து மவ்லவி.ஹாபிஸ். M.செய்யது அலி பாக்கவி.BCom.,MA., அவர்கள் மாணவிகளுக்கு ஆலிமா பட்டத்தை வழங்க சகோ.ஜனாப்.S.ஹைதர் அலி (நிறுவனர், அல்மஹா அறக்கட்டளை) அவர்கள் நிணைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள். நிகழ்ச்சியில் சகோ.கோவை. M.அமீர் அல்தாப். MCom.,BGL.,MBA.,அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். இந்த பட்டமளிப்பு விழாவில் முத்துப்பேட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் சகோ.வழக்கறிஞர்.Lதீன்முஹம்மது.BSc.,BL.,(சட்ட ஆலோசகர், அல்மஹா அறக்கட்டளை, செயலாளர், ஆசாத்நகர் ஜூம்ஆ பள்ளி) அவர்களின் நன்றியுரையுடனும், துவாவுடனும் நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவுற்றது. (அல்ஹம்துலில்லாஹ்...)

இதில் 9 மாணவிகள் ஆலிமா பற்றம் பெற்றதும், நகர் முழுவதும் தமுமுக சார்பாக வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முத்துப்பேட்டை முகைதீன்
படங்கள் – வழக்கறிஞர் தீன்முஹம்மது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக