.muthupet.org இணையதளத்தில் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அளித்த பதில்கள் – பாகம் - 1அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)www.muthupet.org இணையதள நேயர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சந்திப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன். இப்படிபட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக இணையதளத்தின் நிர்வாகிகளுக்கு நன்றியை கூற விரும்புகிறேன். இணையதளத்தில் என்னுடைய கேள்வி:பதில் நிகழ்ச்சி நடைபெறும் என்ற அறிவிப்பு வந்ததும் ஏராளமான கேள்வி வந்திருக்கிறது, அனைத்து கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் பதிலளிக்கப்படும்.
கேள்வி1:- அழைப்பாளர்,தலைவர், பேராôசிரியர் இதில் தங்களை பரவசபடுத்தும் பணி எது?
சகோ.ஜமீல்லி சிங்கப்பூர்.
பதில்: மூன்று பணிகளுமே எனக்கு பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.1979ம் ஆண்டு நான் சிமியில் என்னை இணைத்துக் கொண்டு, சாதாரண உறுப்பினராக இணைத்துக் கொண்டு எனது பொது வாழ்க்கை பணியை, சமுதாய பணியை தொடங்கினேன். பிறகு அதன் தலைவராக பிறகு அனைத்திந்திய ஆலோசனை உயர்நிலைக் குழுவின் உறுப்பினராகவும் இடம் பெற்றிருந்தேன். 1989வரை பத்தாண்டுகாலம் அந்த இயக்கத்தில் பணியாற்றி வந்தேன்.அப்போது சமுதாய பணி மட்டுமில்லாமல் எராளமான அழைப்புப் பணியையும் செய்திருக்கிறேன்.அப்போது யூனி ஹத்தாத் என்ற ஒரு அமெரிக்கர் தமிழகத்திற்கு வருகை புரிந்து ‘ பெண்ணுரிமை’ என்ற தலைப்பில் உரையாற்றிய போது, ,இஸ்லாம் பெண்களின் உரிமைகளை எல்லாம் பறித்திருக்கிறது என்ற தலைப்பில் பேசிய சூழலிலே நாங்கள் சிமி சார்பாக அங்கே சென்று, அந்த பேராசிரியரிடம் பல்வேறு விதமாக கேள்விகளை கேட்டு அவரை திக்குமுக்காட வைத்தது இன்னும் பசுமையாக நினைவிலே பதிந்து இருக்கிறது.அதுமட்டும் இல்லாமல் சிமி ல் இருந்த காலகட்டத்தில், இன்றைக்கும் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பல முஸ்லிம் நிறுவனங்கள் கடைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் அந்த காலக்கட்டத்தில அதாவது 1979லி89ல், முதன் முதலாக சென்னை கண்காட்சியில் எங்கள் அமைப்பினுடைய புத்தக கடைத்தான் இடம்பெறும். அதன் மூலமாக பல இஸ்லாம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்திம் பால் அழைப்பு கொடுத்தது என்னை பரவசப்படுத்தியது.தொடர்ச்சியாக 1989க்கு பிறகு, எனது 30 வயதிற்கு பிறகு, அந்த இயக்கத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 1995வரை தமிழகத்திலே, குறிப்பாக தமிழக தலித் மக்கள் மத்தியிலே, மனிதஉரிமை தளத்திலே பல நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தீண்டாமை ஓழிய, சாதிய பாகுபாடுகளை சாய்பதற்கு இஸ்லாம் எவ்வாறு வழிகாட்டுகின்றன. என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றோம். பல்வேறு கிராமங்களுக்கு, குறிப்பாக லி மதுரை,தேனி மாவட்டங்களுக்கெல்லாம் சென்று, பல கிராமங்களிலே தங்கி பல்வேறு வகையான பணிகளை புரிந்திருக்கின்றேன். கூட்டாகவும், பல்வேறு சக அழைப்பாளர்களுடன் சேர்ந்து இவைகளை செய்திருக்கின்றேன்.தேனி மாவட்டம் போடியில் சாதிய கொடுமை பற்றி எரிந்து தலித்துகள் தாக்கப்பட்ட நிகழ்வு மோசமான மனித உரிமை மீரலாக இருந்தது. அவையெல்லாம் நேரடியாக களத்திலே ஆய்வுக்கு உட்படுத்தி, அந்த கொடுமைகளையெல்லாம் கண்டு பதறியிருக்கிறோம். பலர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள்.குறிப்பாக புத்த பிட்சுவாக இருந்த ஆனந்தா, முஹிபுல்லாவாக, சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மாமூரில் வைத்து சிமிலின் பின்பலத்துடன் அவர் இஸ்லாத்தை தழுவியது, நிச்சயமாக பரவசபடுத்தக் கூடிய செயல்.1992 டிசம்பர் 6ல், பாபர் மஸ்ஜித் இடித்த தினத்தில், முன்னால் இராணுவ வீரர் பிலால் என்பவர் (அப்போதைய பெயர் வீரபத்திரன்) அவர் இஸ்லாத்தை தழுவி, பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள்,நான் என்னுடைய ஊரிலே) நான் ஒரு பள்ளிவாசலை கட்டுவேன் என்று கூறி பிறகு கட்டவும் செய்தார்.அந்த நிகழ்வுகள் எல்லாம் நிச்சயமாக படிவசத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் தான்.பிறகு 1985 முதல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகாலம் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வந்திருக்கிறேன். என்னிடம் படித்த மாணவர்கள் பிறகு உயர்பதவியில் அமர்ந்திருப்பதாக சொல்வதல்லாம் எனக்கு மனநிறைவை தந்திருக்கிறது. குறிப்பாக நான் வெளிநாட்டிற்கு செல்லும்போது மலேசியாவில், சிங்கப்பூரில், அமிரகத்தில், சமீபத்தில் லண்டனில் என்னை அடையாளம் கண்டு எனது மாணவர்கள் என்னை சந்தித்து தற்போதிய உயர்நிலையை எடுத்து சொல்லும்போது, அது நிச்சயமாக பரவசத்தை எனக்கு ஏற்படுத்தின என்று தான் சொல்ல வேண்டும்.தமுமுகவின் துணை தலைவராக கழகத்தின் தொடக்கத்தில் 1995 பொறுப்பேற்று பிறகு 1996ல் மாநில தலைவராக பொறுப்பேற்றேன். தமுமுகவின் சார்பாக பல போரட்டங்களை நடத்தி, உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக போராடி, அவர்களுக்கு நீதி கிடைத்த பிறகு, அந்த மக்கள் சந்தோஷபடுவதை காணும்போது எனக்கு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக 2004ல் டெல்லியில் டிசம்பர் 6ல் தமுமுக தொடங்கப்பட்ட காலம் முதல் பேசி வந்தாலும் கூட, தமுமுகவிலிருந்து, சிலர் வெளியேறிய சில மாதங்களுக்குள்ளாக டெல்லியிலே பாபரி மஸ்ஜித் பிரச்சனைக்காக டெல்லியிலே பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்காக நாம்(தமுமுக) நடத்திய போராட்டம், அதற்கு பிறகு பிரதமர் மன்மோகன் சிங், அவர்களை சந்திதத்து, பாபர் மஸ்ஜித்தையும், இடித்தவர்கள், இடித்தவர்கள் தப்பித்து விட்டார்கள். இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பிய பின்பு, பிரதமர் இது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றேன். என வாக்குறுதி கொடுத்து, சொன்ன மாதிரியே, தனது அலுவலகம் மூலமாக சிபிஐலியை தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் வழக்கில் சேர்த்து விசாரிக்கப்பட உள்ள செய்தி இந்து பத்திரிக்கையில் வெளிவந்தது. அந்த செய்தி எங்களை மிகவும் பரவசப்படுத்திய செய்தியாக இருந்து வந்திருக்கிறது. எனவே, இந்த மூன்றில் எது என குறிப்பிடாமல், நிச்சயமாக மூன்றுமே மனநிறைவை தந்திருக்கின்றன.
கேள்வி 2: நமது சமுதாயம் கடந்த 15 வருடத்தில் தமுமுக மூலமாக சாதித்ததா? அப்படி சாதித்திருந்தால் பட்டியலிடுவீர்களா ?
சகோதரர் அமீத் அஹமத், குவைத்.
பதில்: 1995 ல் தமுமுக தொடங்கப்பட்டது. இன்றைக்கு 2009 லே இருக்கின்றோம், ஏறத்தாழ 15 ஆண்டுகளாக, அல்லாஹ்வின் கிருபையினால் தமுமுக பல சாதனைகளை இந்த சமுதாயத்திற்காக நிகழ்த்தியிருக்கிறது. மிக நீளமான பட்டியல்,ஆனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் பட்டியலிட விரும்புகிள்றேன். ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும், தமுமுக வருகைக்கு முன்னால் தமிழக முஸ்லிம் சமுதாயம், தமுமுக வருகைக்கு பின்னால் தமிழக முஸ்லிம் சமுதாய நிலையை, இரண்டாக பிரிக்கலாம்.ஏற்கனவே முதல் கேள்விக்கு சொன்னதுபோல் 1979 லிருந்து பொது வாழ்கையில் இருக்கின்றேன். பல கட்சிகள் தமிழகத்தில் இருந்து வந்ததது. இவைகளுக்கு நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் உறுப்பினர்கள் இருந்தார்கள்.1980லி95 வரையில் உள்ள அந்த காலகட்டம், தமிழக முஸ்லிம் வரலாற்றில் மிக மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். ஏனென்று சொன்னால் 1980களில், திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில், உரிமைகள் மறுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். இன்னும் கூட நினைவிருக்கிறது. அது பற்றி செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. அந்த பத்திரிக்கையில் வால் போஸ்டரில் ல் கூட ‘ஆ ஜ்ட்ர்ப்ங் ஸ்ண்ப்ப்ஹஞ்ங் ங்ம்க்ஷழ்ஹள்ங்ள் ஒள்ப்ஹம்’ ஒரு முழு கிராமும் இஸ்லாத்தை தழுவுகின்றது. என்ற அளவுக்கு செய்தி போடப்பட்டு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு அது:வட இந்தியாவிலிருந்து யஐட, தநந, இஓட யின் பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த சின்னஞ்சிறு கிராமத்தை முற்றுகையிடும் அளவுக்கு தலைவர்கள் சூழ ஆரம்பித்தனர். அதேலிநேரத்தில் தமிழக முண்ணிற்கு ஏற்றாற்போல இந்து முன்னனியை தநந உருவாக்கியது.420 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களின் வழிபாட்டு தலமாக இருந்த பாபர் மஸ்ஜிதைலி ராம ஜென்ம பூமி கோயிலாக மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டு, ரத யாத்திரை யெல்லாம் நடந்தலி ஒருவேலையிலே, தமிழக வீதிகளிலே இராம கோபாலன் போன்று இந்து முன்னணிகாரர்கள் முயற்சித்தார்கள், எல்லாம் மிக மோசமாக இஸ்லாத்தையும், கண்மணி நாயகம்(ஸல்) அவர்களையும், அன்றிருந்த ஙஏத அரசு இதற்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்த சூழலையும் நாம் பார்கின்றோம். இதுபோன்ற ஒரு நேரத்திலே, தமிழகத்தில் இருந்த பல முஸ்லிம் அமைப்புகள் இவைற்றையெல்லாம் எதிர்கொள்ள தவறவிட்ட நிலையை நாம் பார்கின்றோம். இதன் காரணமாக வன்முறைக்கு வன்முறை பதில் என்ற அடிப்படையில் நிகழ்வுகள் நடைபெற்று , வட இந்தியாவிலும் ஈர்ம்ம்ன்ய்ஹப் ற்ங்ம்ல்ங்ழ்ஹற்ன்ழ்ங் என்று சொல்லக் கூடிய, வகுப்பு வாத உஷ்ணம் ஏறி கொண்டே செல்லக்கூடிய, நிகழ்வுகள், இயக்கம், ஆய்டும் வெட்டு, குத்து கொலை என்ற அளவில் ஜனநாயக ரீதியாக என்பதை எல்லாம் அறியாத ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகள் இருந்து விட்ட ஒரு சுழலை நாம் பார்த்தோம். இத்தனைக்கும் நான் குறிப்பிட்டது போது அரசியல் கட்சிகள் இருக்கின்றது. பெரிய பெரிய ஜாம்பவன்கள் முஸ்லிம் கட்சியின் தலைவகளாக இருந்தார்கள்.பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட குற்றவாளிகள் மீது கூட போடப்படாத தடா என்ற கொடிய சட்டம் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து கருப்பு கொடி காட்டியவர்கள் மீது தடா சட்டம் பாய்ந்த ஒரு காலம், அப்படி தடாவால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய சட்ட ரீதியாக முயற்சி செய்தவர்களையும் தடாவில் கைது செய்த ஒரு சுழலும், இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பற்ற நிலையிலே, இதை கண்டு கொள்ளாத முஸ்லிம் இயக்கங்களும், என்ற நிலையை மாற்றி ஜனநாயக ரீதியாக, சட்ட பூர்வமாக, வீதிக்கு வந்து போராடி நம்முடைய உரிமைகளுக்காக வேண்டிய நாம் களம் காணும் வகையில் தமுமுக உருவாக்கப்பட்டு.இன்று 2009 பார்க்கும்போது புதிது புதிதாக பல்வேறு இயக்கங்கள் வந்தபோது அனைத்திற்கும் வித்திட்ட மிகப்பெரிய ஒரு சாதனையை தமுமுக தான் நிகழ்த்தியது.
கேள்வி 3: இந்திய இஸ்லாமிய சமூகம் எதிர்நோக்கியுள்ள பெரிய பிரச்சினையாக எதை கருதுகிறீர்கள்?
சகோதரர்: வவ்வாலடி ஃபிரோஸ்கான், பிரான்ஸிலிருந்து
பதில்: மிகப்பெரிய சவால் என்னவென்றால் கல்வி அறிவின்மை, சச்சார் குழு அறிக்கை சொல்வது போல இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்களின் கல்விநிலை செட்டியுடு மக்களை விட மிக மோசமாக இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த கல்வியில் நிச்சயமாக இந்த சமூகம் மிகப்பெரிய அளவில் முன்னேற வேண்டும். ‘இக்ரலிஅ பிஸ்மி ரம்பி கல்லதி ஹலக்’ ஓதுவீராக என்று தொடங்கக்கூடிய என்ற திருக்குர்ஆனுக்கு உரிமை கொண்டாக்கூடிய சமூகம் முஸ்லீம் சமூகம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். கல்வி கற்பது ஒரு ஆண், பெண்ணின் கடமை என்று சொல்கின்றார்கள். அந்த சமூகம் கல்வியில் விழிப்புணர்வு ஏற்பட்டு நம்முடைய ஒவ்வொரு கிராமத்திலும் இந்த சமூகத்திற்கென்று பள்ளிக்கூடங்கள்,சாதாரண நிலையிலிருந்து உயர்நிலை பள்ளிக்கூடம் வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கல்லூரி, ஒரு பெரிய கல்லூரி, குறைந்தபட்சம் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மருந்துவ கல்லூரி, பல்கலைக்கழகம் இந்த அடிப்படையில் இந்த (முஸ்லிம்) சமூகம் கல்வியில் முன்னேறினால் பல பிரச்சினைக்களுக்கு இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)தீர்வை தரும் என்பது தான் தலையான பிரச்சினையாக நான் கருதுகின்றேன்.அதே போல, இந்த அரசியல் விழிப்புணர்வும் இந்த சமூகத்திற்கு மிக முக்கியமாக தேவை. மற்றொன்று முஸ்லிம் அல்லாத சமூக மக்களிடம் நல்லுறவை பலப்படுத்தக்கூடிய பணிகளிலும் இந்த முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாக அமைய வேண்டும்.
கேள்வி4 :-இந்தியாவில் இஸ்லாமிய வங்கி செயல்படுவதற்கு எதிரான, தடைக்கற்கள் உடைக்கப்படுமா இது குறித்து அரசின் நிலைபாடு என்ன?
சகோதரர்: வவ்வாலடி ஃபிரோஸ்கான், பிரான்ஸிலிருந்து
பதில்: இந்தியாவிலே இஸ்லாமிய வங்கி செயல்பட வேண்டும் என்றால், முதலிலே அதற்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய தடை கற்கள் இந்தியாவிலே வங்கி நிர்வாக நடைமுறைச் சட்டத்திலே திருத்தம் கொண்டு வர வேண்டும். இதனை இஹய்ந்ண்ய்ஞ் தங்ஞ்ன்ப்ஹற்ண்ர்ய் ஆஸ்ரீற் என்று சொல்கிறார்கள்.தற்போது உள்ள இஹய்ந்ண்ய்ஞ் தங்ஞ்ன்ப்ஹற்ண்ர்ய் ஆஸ்ரீற் (வங்கி நிர்வாக சட்டத்திலே) வட்டியின் அடிப்படையில் இயங்க கூடிய வங்கிகளுக்கு மட்டும் தான் தங்ள்ங்ழ்ஸ்ங் இஹய்ந் ர்ச் ஒய்க்ண்ஹ(தஇஒ), இந்தியாவின் மத்திய வங்கி அனுமதி கொடுக்க முடியும், அந்த சட்டத்திலே திருத்தம் கொண்டு வர வேண்டும். என்னுடைய முனைவர் பட்டத்திற்க்காக மேற்கொண்ட ஆய்வில் கொடுத்திருக்கூடிய பரிந்துரையில் நடைமுறை, இந்த பேங்கின்(இஹய்ந்ண்ய்ஞ் தங்ஞ்ன்ப்ஹற்ண்ர்ய் ஆஸ்ரீற்) என்னென்ன விதிமுறையெல்லாம் நடைமுறையை பற்றி திருத்தப்பட வேண்டும் என்பதை பற்றி சொல்லியிருக்கின்றேன். நம் நாட்டின் அருகில் இருக்கக்கூடிய இலங்கையில், இந்த வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்கள்.சிங்கப்பூர் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் இலங்கையை பொறுத்தவரை பௌத்த நாடு, சிங்கப்பூரை பொறுத்தவரை, செக்யூலர் நாடு (ஜனநாயக நாடு), பிரிட்டன் வங்கி நடைமுறை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் இயக்குனரின் தலைமையில் சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு குழு போடப்பட்டு. ஏனென்றால் தொடர்சியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் வைத்து வரக்கூடிய கோரிக்கை, ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகள் வைத்துவரக்கூடிய கோரிக்கை. பிப்ரவர: 7 2007ல் டில்லி பேரணிக்கு பிறகு பிரதமரை சந்திக்கும்போது வைத்த கோரிக்கையில் இதுவும் ஒன்று, இந்தியாவில், வட்டியில்லா வங்கிகளுக்கு வெற்றிக்கரமாக நடத்தப்பட கூடிய வங்கிகளுக்கு இந்தியாவிலும் அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.ஒரு ரிசர்வ் வங்கி இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு சாத்தியமில்லை என்று அறிக்கை கொடுத்துவிட்டது.அதற்கு பிறகு தொடர்ச்சியாக பல்வேறு சமூக அமைப்புகள் தமுமுக உட்பட, கொடுத்த அழுத்தத்தின் காரணமாக….. ரகுராமன் ராஜன் என்ற பொருளாதார நிபுணர் தலைமையில் அவர் பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். அவருடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு இந்தியாவில் வட்டி இல்லா வங்கி செயல்படுவதற்க்கு அனுமதி கொடுக்கவும் சில திருத்தங்கள் செய்யலாம் என்று பரிந்துரை செய்து இருக்கிறார்கள். சமீபத்தில் வரக்கூடிய செய்தி என்னவென்றால், விரைவில் அதற்கான சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. அது வர வேண்டும்! இல்லையென்றால் தொடர்ச்சியாக கொண்டு வருவதற்க்கான போராட்டங்கள் தமுமுக நடத்த தயாராக இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி5:-வேலூர் கோட்டை பள்ளிவாசல் சம்மந்தமாக பல போராட்டம் செய்தும் அது இன்னும் பிரச்னை முடியவில்லை. அது கிடைக்கும் வரை என் போராடவில்லை?
abdulrazack.
பதில்:சகோதரர்களே 1935ல் ஆரம்பித்து பாபரி மஸ்ஜித் இடிக்க வேண்டும் என்ற முயற்சி செய்து 1992ல் இடித்து தரைமட்டமாக்கினார்கள்.வேலூர் கோட்டை பள்ளிவாசல் பிரச்சனை பொருத்த வரை அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு போராட்டத்தை வேலூரில் மே 9,2008 ல் நடத்தினோம், நீங்கள் கூறுவது போன்று ஏன் போராடவில்லை என்று சொல்வது தவறு. நாம் சில வியூகங்களை அமைத்து இருக்கிறோம்.அடுத்த முயற்சியில் நாம் கைவிடவில்லை, அதில் வெற்றிபெறும் வலை (இன்ஷாஅல்லாஹ்,,)நாம் ஓயமாட்டோம்எல்லாவற்றையும் நான் வெளிப்படையாக கூறமுடியாது.நிச்சயமாக வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் வரை நாம் ஓயமாட்டோம் உரிய தருணத்தில் உரிய அறிவிப்புகள் இன்ஷா அல்லாஹ் வரும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.
கேள்வி7 :-எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களின் அரசியல் கூட்டணிஎவ்வாறு இருக்கும், அதற்கான அடிதளமிட்டு விட்டீர்களா?
முத்துப்பேட்டை முகைதீன்
பதில் : ஒன்றை மட்டும் இங்கு உறுதியாக சொல்லி கொள்ள விரும்புகின்றேன்(இன்ஷா அல்லாஹ்…)தனித்து போட்டியிட மாட்டோம் கூட்டணி என்பது இந்த சமுதாயத்தினுடைய தனித்தன்மை, தன்மானம் இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு,சமுதாய நலனை கவனத்தில் வைத்துக் கொண்டு அரசியலில் சரியானமுறையில் தடம் பதிக்கக்கூடிய வகையில் ஒரு கூட்டணியில் (இன்ஷா அல்லாஹ்) இடம் பெறும் என்பதை மட்டும் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி 8 :- கடந்த நாடளுமன்ற தேர்தலின் அரசியல் களம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது.?
அ.ஷாகுல் ஹமீது. துபாய், (முத்துப்பேட்டை)
பதில்: சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம்., அதில் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடாமல் கூட கிடைக்காத பல அனுபவங்கள் அனைவருக்கும் அதில் கிடைத்திருக்கிறது,ஒரு தேர்தலை எப்படி எதிர்நோக்க வேண்டும், அதற்கான அடிப்படை பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும் வாக்காளர்களை எப்படி அணுகவேண்டும். ஒருவருக்கு கட்சியை எவ்வாறு பராமரிக்க வேண்டும். இதையெல்லாம் நாம் ஒரு கூட்டணியில் இருந்திருந்தால் அந்த கூட்டணியில் உள்ள பெரிய கட்சியை சேர்ந்தவர்கள் இத்தனை பணிகளையும் செய்திருப்பார்கள் நாம் அவர்கள்கூட சேர்ந்து தான் பணியாற்றிருக்க முடியும்.தனியாக நாம் போட்டியிட்டதால் அனைத்திலும் நிபுணத்துவம் பெறக்கூடிய அளவில் பயிற்சி கிடைத்த இருக்கிறது. இந்த பயிற்சி எங்கு உதவியது என்றால்… உங்களுக்கு தெரியும் சமீபத்தில் மூன்று உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல், மமக போட்டியிட்டு தென்காசி நகராட்சியில் ஒரு வார்டில் நாம் முதல் இடம் அதிமுக 2ம் இடம், திமுக ஆதரித்த மூஸ்லிம் லீக் 3ம் இடம் என்ற நிலை ஏற்பட்டது. அதே போன்று லால்பேட்டையில் நாம் முதலிடம் திமுக ஆதரித்த தேசிய லீக் 2ம் இடம் என்ற நிலையில் நம் வேட்பாளர் வெற்றிபெற்றார். அடுத்து விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் அதிமுக வேட்பாளர் விலைக்கு வாங்கப்பட்ட நிலையில், நாம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதனால் அதிமுக அங்கு போட்டியிட்டு இருந்திருந்தால் நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று இருந்திருப்பார்.இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த அந்த படிப்பினைகள் அடிப்படையில் நம்முடைய சகோதரர்கள் களப்பணி செய்து வெற்றிகளை குவித்தார்கள். எனவே அந்த அரசியல் களம் நிறைய படிப்பினைகளை நமக்கு தந்திருக்கிறது.
கேள்வி 9:- பொது வாழ்க்கையில் நீங்கள் இதுவரை சாதித்ததாக நினைத்தது எதை இன்னும் சாதிக்க நினைப்பது என்ன?
(அக்பர் -சிங்கப்பூர்)
பதில் ;நான் எதையும் தனிப்பட்ட முறையில் சொல்லமாட்டேன், தமுமுக என்பது ஒரு தனிநபர் அமைப்பல்ல. இது ஒரு கூட்டமைப்பு,இதில் தலைவர்கள் முதல் தொண்டர்கள்வரை பல்வேறு வகையான தியாகங்களை செய்திருக்கின்றோம். சிறைச்சாலைக்கு சென்று இருக்கின்றோம். இனி புதிதாக அமைப்புகள் எல்லாம் வருகிறது. சிறை என்றாலே என்னவென்று தெரியாது பல்வேறு இக்கட்டான சோதனைகளின் போதெல்லாம் எந்த விதமான தளர்வையும், வேதனையும் பெறாமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து அந்த அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து அந்த சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக மாற்றியிருக்கின்றோம். ஒரு காலகட்டத்தில் தமுமுகவினுடைய சேப்டர் நிலைபாடெல்லாம் கடந்த காலங்களில் வந்தது ஆனால் அல்லாஹ்வுடைய உதவியும், அல்லாஹ்வுடைய கிருபையும் இந்த அமைப்புக்கு இருந்தது. அது போன்று எல்லா சோதனைகளையும் அல்லாஹ்வுடைய துணைகளை கொண்டு சந்திக்க கூடிய மன வலிமை தமுமுகவினுடைய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இருந்ததின் காரணமாகதான் பல்வேறு வகையான சாதனைகள் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை எல்லாம் சாதனைகளால் குறிப்பிடலாம். ஆனால் இவை எதுவுமே தனிப்பட்ட சாதனைகள் அல்ல. இது தமுமுக என்ற பெரும் அமைப்பு கூட்டுரீதியாக சாதித்த சாதனைகள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். இனி என்ன சாதிக்க போகிறேன் என்றால் இனி தனி மனிதனாக ஜவாஹிருல்லாஹ் என்ற தனி மனிதன் எதையும் சாதிக்க மாட்டான். ஆனால் கூட்டு ரீதியாக இன்னும் இந்த சமுதாயத்திற்கு ஏராளமான உரிமைகளை பெற்று தர வேண்டிய நிலை நமக்கு கிடைத்துள்ளது. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடை பெற்று இருக்கின்றோம். தமிழக அளவில் கல்வி வேலை வாய்பில் இட ஓதுக்கீடு பெற்று இருக்கின்றோம். தமிழக அளவில் அகில இந்திய அளவிலும் வேலை, வாய்பிலும், கல்வியிலும் பெற வேண்டும் இட ஓதுக்கீடு அதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும் அந்த சாதனைகளை தமுமுக நிகழ்த்த வேண்டும். அதற்கு அடுத்ததாக கல்வி வேலைவாய்ப்பில் மட்டும் அல்ல அரசியல் அதிகாரத்திலும் நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி மன்றம் வரை சிங்கப்பூரில் இருப்பது போல இலங்கையில் இருப்பது போல இன்னும் பல நாடுகளில் இருப்பது போல முஸ்லிம்களுக்கு அரசியலிலும் இட ஓதுக்கீட்டை விகிதாசார அடிப்படையில் உரிய இடங்களை பெறுவதற்காவே வேண்டிய முயற்சிகளை செய்வோம், போராட்டங்களை நடத்தி அதையும் பெற்று தர வேண்டும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேலோண்ங்கி நிற்க வேண்டும். ஒரு வெகு சில நிறுவனங்கள் என்ற ஒரு நிலைமாறி முஸ்லிம் சமுதாயத்திற்கு சொந்தமான ஏராளமான கார்ப்ரேட் நிறுவனங்கள் ஏற்பட வேண்டும். இதற்கெல்லாம் உழைக்க வேண்டும். என்பது தான் இதற்கெல்லாம் கூட்டுரீதியாக தமுமுக மூலமாக மமக மூலமாக உழைத்து கூட்டு ரீதியாக சாதிக்க வேண்டும். என்பது தான் அனைவருடைய விருப்பம்.
கேள்வி 10:- தமிழகத்தில் 75க்கும் மேல் ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் தமுமுகவிற்கு(என்னுடைய வாழ்த்துகள் அவை அனைத்தும் ஆம்புலன்சுகளும் சரியாக செயல்படுகிறதா?
Rauthar – malaysia
பதில்: நிச்சயமாக செயல்படுகிறது என்று தமுமுக சார்பாக நீங்கள் குறிப்பிட்டது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே ஆம்புலனஸ் அவசர சிகிச்சை ஊர்திகள் தமுமுகவினால் இயக்கப்படுகிறது. இந்த தமிழகத்திலே 108 எண்ணுடைய அரசு ஆம்புலன்ஸ் செயல்படுவதற்கு முன் மாதிரியாக அமைந்தது. தமுமுக ஆம்புலன்ஸ் சேவை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலேயே ஒரே ஒரு நிறுவனம் எவ்வளவு அதிகமான ஆம்புலன்ஸ்சை இயக்குகிறது என்றால் அந்த சிறப்பு தமுமுக விற்கு தான் உண்டு.நிச்சயமாக இந்த சேவை அனைத்து மக்களாளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேசிக்க கூடிய ஒரு சேவையாக அமைந்திருக்கிறது. ஒரு பிரபல கூரியர் நிறுவனத்தினுடைய பாண்டிச்சேரி மேலாளராக இருக்க கூடிய சகோதரர் ரமேஷ் என்பவர் ஒரு முறைசாலை விபத்திலே மாட்டிக் கொள்கிறார். அதற்கு பிறகு அவருடைய நிலை என்னவென்றால் சாலை விபத்து நடந்தாலும் உடனடியாக அந்த சாலை விபத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கு அவர்களுடைய சுபாவம் அந்த அடிப்படையிலே அவர் கடலூர் மாவட்டத்திலே பயணம் செய்யும் போது ஒரு சாலை விபத்தை பார்த்திருக்கின்றார். காரை விட்டு இறங்கி என்ன பிரச்சினை என்று கேட்டு விட்டு ஆம்புலன்ஸ்காக முயற்சி செய்திற்கா என்று கேட்கும் போது இல்லை நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம் இதுவரைக்கும் ஆம்புலேன்ஸ் வரவில்லை என்று சொன்னவுடன் உடனடியாக தன்னுடைய செல்போனிலிருந்து தமுமுகவுடைய நெல்லிக்குப்பம் ஆம்புலன்ஸ் சேவையை அணுகி உடனடியாக சில நிமிடங்களிலேயே ஆம்புலேன்ஸ் வருகின்றது. இதன் நிகழ்வுடன் அந்த கூரியர் நிறுவனத்தினுடைய உரிமையாளருடன் அவர் பகிரிந்து கொண்டு இருக்கின்றார்.இந்த அடிப்படையிலே அனைத்து மக்களுடைய அபிமானத்தையும் பெற்ற சேவையாக தமுமுக நடத்தகூடிய ஆம்புலன்ஸ் சேவை அமைந்திருக்கிறது. இப்படி சேவை செய்யும் போது அங்கோன்றும், இங்கொன்றும் ஒரு சில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளை சுட்டிக்காட்டினால் நிச்சயமாக கலைவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக