
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் சென்னை காமராசர் அரங்கில் நேற்று ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ராமமூர்த்தியின் மகன்கள் உள்பட பல கோஷ்டிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் ஆட்சியை பிடிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் 40 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. போராட்டம் நடத்தாதது, சட்டமன்றத்தில் குரல் எழுப்பாதது போன்ற செயல்பாடுகள் தான் இதற்கு காரணம்'' என்றார்.
தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசியபோது, ''தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியுள்ளது. சோனியா எதை சொன்னாலும், அதைச் செய்யத் தயாராக உள்ளோம். ப. சிதம்பரத்தின் கருத்துடன், கார்த்தி ப.சிதம்பரத்தின் கருத்து ஒத்துவராது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்ற கார்த்தி ப.சிதம்பரத்தின் ஆதங்கம் புரிகிறது. சோனியாகாந்தி கூறினால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் குரல் ஒலிக்கும்'' என்று கூறினார்.
thanks for .tamilsaral.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக