குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்று இஷான் ஜாப்ரியின் மனைவி ஷகியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட்டு இதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் ஏற்கனவே நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தினார்கள். தொகாடியாவை கடந்த மாதம் 19-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று அவர் காந்திநகரில் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜர் ஆனார். அப்போது சிறப்பு விசாரணை குழு அலுவலகம் முன்பு ஏராளமான சாமியார்களும், தொண்டர்களும் கூடி நின்று தொகாடியாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.
நன்றி - தமுமுக சவுதி.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக