அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 7 ஜூன், 2010


மதானியின் மீது மீண்டும் ஒரு பொய் வழக்கு

பெங்களூரில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 2 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.


இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக பொய் வழக்கில் கைதாகி பின்பு விடுதலையான கேரளாவை சேர்ந்த "மக்கள் ஜனநாயக கட்சியின்(PDP)" தலைவர் அப்துல் நாசர் மதானியின் பெயரையும் இந்த பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்க காவல்துறையினர் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மதானிக்கு எதிரான சாட்சிகள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இப்பொழுது பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அவருக்கு எந்த வகையில் தொடர்பு இருந்தது என்ற விவரங்களே இல்லாமல் இந்த வழக்கில் அவர் சேர்க்கபடவுள்ளார். குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் இறுதி பணி நடந்து வரும் இந்த சமயத்தில் மதானியின் பெயர் சேர்க்கபடுவதற்க்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் அவரது பெயர் சேர்க்கப்படுவது குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவை வழக்கு போலவே இந்த வழக்கிலும் மதானி சேர்க்கப்பட்டால் மனித உரிமை ஆர்வலர்களும் மற்ற பொதுநலவாதிகளும் கலத்தில் இறங்குவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக