பள்ளிக்குச் சென்ற வேனில் தனித்து விடப்பட்ட சிறுமி இறந்தாள்
தம்மாம்
தனியார் வேனில் பள்ளிக்கு சென்ற யூகேஜி படிக்கும் சிறுமி வேனிலேயே தூங்கி விட்டதால் பூட்டப்பட்ட வேனிலேயே தனித்து விடப்பட்டாள். 47 டிகிரி செல்சியஸ் கடும் வெயில் காரணமாகவும் மூச்சுவிட முடியாமலும் சிறுமி பரிதாபமாக இறந்து விட்டாள்.
தம்மாம் இன்டர்நேஷனல் இன்டியன் ஸ்கூல், ராக்கா என்ற பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்பு ஒரே கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்த பள்ளி, பள்ளிப்பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியதன் காரணமாக மற்றுமொறு கட்டிடம் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டு பெண்களுக்கென்று ஒன்றும் ஆண்களுக்கென்று ஒன்றும் என்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் நிறம்பி விட்டதால் அருகில் உள்ள வீடுகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிக்கூடமாக இயங்கி வருகிறது.
வேனுக்குள் சென்று எல்லா பிள்ளைகளும் இறங்கி விட்டார்களா? என்று சோதிக்காததால் வேன் டிரைவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அதிகாலை 6:30 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளாக பள்ளிக்குச் செல்ல பிள்ளைகள் தயார் ஆவார்கள். பள்ளி 7:20 க்கு துவங்குகிறது. இறந்து விட்ட சிறுமி ஃபிதா ஹாரிஸ் உம் அந்த சிறுமியின் மூத்த சகோதரியும் வேனில் ஏற்றிக் கொண்டு வந்த வேன், மூத்த சகோதரியை பெண்கள் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு பின்னர் ஆண்கள் பள்ளிக்கூடமும் பாலர் பள்ளிக்கூடமும் இணைந்துள்ள 2 கிலோமீட்டர் தொலைவுள்ள பள்ளிக்கூடத்திற்கு வந்து மற்ற பிள்ளைகளை இறக்கி விடும் போது, சிறுமி ஹாரிஸ் மட்டும் இறங்க வில்லை. எல்லா பிள்ளைகளும் இறங்கி விட்டனர் என்று நம்பி அந்த வேனை பள்ளிக்கு அருகிலேயே நிறுத்தி பூட்டி வைத்து விட்டு, மற்ற டிரைவர்களோடு தம்மாம் வந்து விட்டார் டிரைவர்.
பள்ளிக்கூடும் விடும் சமயமாகிய பகல் 11:00 மணிக்கு சென்று வேனைத் திறந்து பார்த்தால் சிறுமி மயங்கிய நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது சக டிரைவர்களின் உதவியுடன் பள்ளியின் முதலுதவி பிரிவுக்கு அனுப்பப்பட்டு பின்னர் பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். ஆனால் அங்கே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
(குறிப்பு: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் சிரமங்களை பொருட்படுத்தாது ஸ்கூல் பஸ்ஸில் அனுப்புங்கள், ஏனென்றால் அதில் டிரைவரும் உதவியாளரும் இருக்கிறார், அல்லது பொறுப்புள்ள டிரைவர்கள் உள்ள வேனில் அனுப்புங்கள். ஏசி வசதியில்லாத வேனிலோ, பழைய வேன்களிலோ அனுப்பாதீர்கள். சொந்த வாகனம் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை தாங்களே அழைத்துக் கொண்டு செல்வது தான் மிகவும் பாதுகாப்பானது. மேலே குறிப்பிட்ட நிகழ்வு போல் மற்றொன்று நிகழாதவாறு பார்த்துக் கொள்வது அனைவரது கடமையாகும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக