அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 19 ஜூன், 2010

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு - இரு RSS தொண்டர்கள் கைது! (இதுவே முஸ்லிமாக இருந்தால் தீவிரவாதிகள் அதுவே ஹிந்துத்துவவாதிகளாக இருந்தால் தொண்டர்கள்) இப்படிதான் பத்தரிக்கைகளில் செய்திகள் வந்தன.


ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் RSS தொண்டர்கள் இருவருக்கு போலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வரும் சிபிஐ, RSS தொண்டர்களான தேவேந்திர குப்தா மற்றும் அவருடைய கூட்டாளியான லோகேஷ் சர்மாவை இன்று ஹைதரபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமண்றத்தில் ஆஜர் செய்தது.
வழக்கை விசாரித்த சிறப்பு மாஜிஸ்திரேட் அவர்கள் இருவரையும் ஜூன் 30ந் தேதி வரை போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. குற்றஞ்சாட்டபட்ட இருவரும் அஜ்மீர் குண்டு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாக சிறையில் இருந்து வந்தனர்.
இதற்கிடையே மெக்கா மசூதி குண்டு வெடிப்பை விசாரித்து வந்த சிபிஐ, தேவேந்திர குப்தாவுக்கும், லோகேஷ் சர்மாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி, அவர்கள் இருவரையும் தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்குமாறு கோரி இருந்தது. மேலும் மசூதி குண்டு வெடிப்பு சதியில் மேலும் இருவரை சிபிஐ தேடி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக