அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தாஜ்மஹால் தேர்வு!


உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவின் தாஜ்மஹால் விளங்குகிறது. தற்போது ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தாஜ்மஹால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் 2010ஆம் ஆண்டுக்கான ஆசிய கண்கவர் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் சர்வதேச பொழுது போக்கு பூங்கா சங்கம் சார்பில் ஆசியாவின் கண்கவர் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் 6 விதமான பிரிவுகளில் ஆசியாவின் பிரபலமான இடங்களை தேர்வு செய்ய போட்டி நடத்தப்பட்டது. இதற்காக மொத்தம் 94,099 பேர் ஓட்டுப் போட்டனர். அவர்களில் அதிமானவர்கள் தாஜ்மஹாலை தேர்வு செய்தனர். இதன் மூலம் ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தாஜ்மஹால் தேர்வு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக