கற்பழிப்பு வழக்கில் கைதான நகரசபை தலைவர் ஜலீல் மீது 8 கிரிமினல் வழக்கு ரவுடி பட்டியலிலும் சேர்ப்பு
இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்த ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீல் உள்பட 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜலீல் மீது ஏற்கனவே போலீசில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இது பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீல் மீது கடந்த 2007-ஆம் ஆண்டு மீனவர் பேரவை தலைவர் குமார் என்பவரை மிரட்டி தாக்கியது, பெண் கடத்தல் வழக்கு, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த ராஜ குரு என்பவரை அடித்தும், அவருடைய கடையை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது தெரிந்தது. மேலும் அவர் கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஜலீல் மீது ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் 8வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் மூலம் வெளியே வந்துள்ளார். பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்ட ஜலீல் ரவுடி பட்டி யலிலும் உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக