அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 18 ஆகஸ்ட், 2010

சி.பி.ஐ. மூலம் மிரட்டி, பா.ஜனதாவுடன் மத்திய அரசு திடீர் உடன்பாடு: லாலு பிரசாத், பிருந்தா கரத் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஆக.18-

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் முதல்- மந்திரி நரேந்திமோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று, சி.பி.ஐ. நற்சான்றிதழ் வழங்கி இருப்பதாக செய்தி வெளியானது.

.பி.ஐ. மூலம் மிரட்டி, பா.ஜனதாவுடன் மத்திய அரசு திடீர் உடன்பாடு செய்துகொண்டதாக, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் குற்றம் சாட்டி உள்ளார்.

அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு பா.ஜனதாவின் ஆதரவு தேவை இருப்பதே, நரேந்திரமோடிக்கு சி.பி.ஐ. நற்சான்றிதழ் வழங்கி இருப்பதற்கு காரணம் என்று, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி தலைவர் பிருந்தா கரத்தும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்யாதவும் இந்த விவகாரத்தில் ஒன்றாக கைகோர்த்து இருக்கும் பா.ஜனதா மற்றும் காங்கிரசை நம்ப முடியாது என்று கூறினார்.

-- மாலை மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக