வட்ட வழங்கல் அதிகாரிக்கு மிரட்டல் தி.மு.க., நிர்வாகி மீது
வழக்குமுதுகுளத்தூர் : முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அதிகாரியை செல்போனில் மிரட்டிய தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.முதுகுளத்தூரில் கடந்த அக்., எட்டாம் தேதி அமைச்சர் தங்கவேலன் தலைமையில் முதுகுளத்தூர், வெண்ணீர் வாய்க்கால் பகுதியில் உள்ளோருக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. இதற்காக ஏழாம் தேதி இரவு முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அதிகாரி கதிரேசன், ஒன்றிய குழு தலைவர் ஈஸ்வரியிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். இதில் பேசிய அவரது கணவர் கருப்பையா "நாளை காலையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இரவில் தகவல் சொல்கிறாயா' என கூறி அவரையும், அவரது குடும்பத்தையும் அவதூறாக பேசி, காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் முன் உன்னை செருப்பால் அடிப்பதாக மிரட்டி' உள்ளார். இதை தொடர்ந்து அமைச்சர் விழாவில் வருவாய் அதிகாரிகள் பங் கேற்கவில்லை. மேலும் இதை கண்டித்து முதுகுளத்தூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் நேற்று முன்தினம் வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதனிடையே வட்ட வழங்கல் அதிகாரி கதிரேசன் கொடுத்த புகாரின் படி முதுகுளத்தூர் போலீசார் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் கருப்பையா மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக