மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு .
கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் மிகவும் பின்தங்கி இருந்த முஸ்லிம் சமுதாயம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வரவால் ஓரளவுக்கு உன்னத நிலையை அடைந்திருக்கிறது. நாம் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டு முஸ்லிம்களை உறக்க நிலைக்கு தள்ளிய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் செயலிழந்து விட்ட நிலையில் முஸ்லிம்கள் அநியாயமாக இந்துத்துவ வெறியர்களால் தாக்கப்படுவதும் அவர்களுக்கு துணை நின்ற காவல் துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம்களே கைது செய்யப்படும் நிலையை கண்ட நம் சமுதாய அறிவு ஜீவிகளால் 1995ல் துவக்கப்பட்டது தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.துவக்கப்பட்ட அன்றிலிருந்தே முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டது.
கடந்த 15வருடங்களுக்காக இடஒதுக்கீட்டுக்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய தமுமுக இறுதியாக, இடஒதுக்கீட்டை அடிப்படையாக வைத்து தேர்தல் உடன்பாட்டை திமுகவுடன் செய்து கொண்டதன் விளைவு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைத்தது. தேர்தல் உடன்பாடு செய்து கொண்ட பிறகும் இடஒதுக்கீட்டை தருவதற்கு கலைஞர் காலதாமதம் செய்தார் என்பதும் தமுமுகவின் கடும் மிரட்டலுக்கு பிறகே இடஒதுக்கீடு கிடைத்ததும் என்பது நினைவு கூறத்தக்கது.
அந்த இடஒதுக்கீட்டின் விளைவாகவும் தமுமுகவின் அயராத கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் காரணமாகவும் நம் முஸ்லிம் சமுதாய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு சேர்ந்துள்ளனர்.நேற்று கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட இந்த முன்னேற்றத்தை குறிப்பிட்டுள்ளார்.மருத்துவ படிப்பில் 74 சதவீதமும் பொறியியல் படிப்பில் 72 சதவீதமும் முஸ்லிம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.எம்.பி.பி.எஸ் மருத்துவ பட்டப்படிப்பில் இடஒதுக்கீட்டிற்கு முன்பு 2006-2007 ல் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 46 ஆக இருந்தது.2007-2008 இல் 57 இடங்கள் கிடைத்தது.இடஒதுக்கீட்டிற்கு பிறகு 2008-2009 இல் 78 இடங்கள் கிடைத்தன. 2009-2010 இல் 80 இடங்களாக அதிகரித்துள்ளன.
பொறியியல் படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதற்கு முன் 2007-2008 இல் 2,125 இடங்களும், இடஒதுக்கீட்டிற்கு பின்பு 2008-2009 இல் 3,288 இடங்களும், 2009-2010 இல் 3,655 இடங்களும் கிடைத்தன என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.இடஒதுக்கீட்டின் மூலமாக பெற்ற பலன்கள் சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது மிகவும் குறைவு என்றாலும் இது ஒரு தொடக்கம் தான்.
கல்வி வேலை வாய்ப்பில் தனது சாதனையை நிகழ்த்தி விட்டு அரசியல் களத்தில் குதித்து தனது தேர்தல் கணக்கையும் துவக்கியுள்ளது தமுமுக. தென்காசி, லால்பேட்டை வார்டுகளில் வெற்றி பெற்ற மமக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கான தயாரிப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடும் தமுமுகவின் பணிகள் சிறக்க பிரார்தனை செய்யுமாறு அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக