
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் துபையில் கடந்த 29.01.2010 அன்று வெள்ளிக்கிழமை அல்கிஸைஸ் அல்தவார் பூங்காவில் ஒருநாள் இஜ்திமா நிகழ்ச்சியினை சுவனத்தை நோக்கி என்ற தலைப்பில் தமுமுகவின் துபை மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியினை அதன் துபை மண்டலத் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையேற்று நடத்தினர். துபை மண்டலச் செயலாளர் அதிரை ஷாஹுலின் கிராஅத்துடன் துவங்கிய முதல் அமர்வில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத் தலைவர் ஏ.எஸ் இப்ராஹீம், “இஸ்லாம் கூறும் அரசியல்” என்ற தலைப்பில் ஆற்றிய உரைக்கு பின் அமீர் சுல்தான் 'முனனோர்களின் ஆன்மிக வாழ்வு' என்ற தலைப்பிலும் துபை தவ்ஹீத் இல்லம் தலைவர் நாகூர் ஸெய்யதலி, 'இஸ்லாம் கூறும் சமுக ஒற்றுமை' என்ற தலைப்பிலும். உரை நிகழ்த்தினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் 'பெரும் பாவங்களை தவிர்ப்போம்' என்ற தலைப்பிலும். நிகழ்த்தப்பட்ட உரையுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றது.
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வினாடி வினா நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது. மார்க்க மற்றும் சமுதாயம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது சரியான பதில் அளித்த சகோதரர்களுக்கும் உற்சாகம் ஊட்டிய விளையாட்டு போட்டியில் வென்ற சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அஸர் தொழுகைக்கு பிறகு தொடர்ந்த இரண்டாவது அமர்வில் தமிழக அரசின் முன்னால் கல்வித்துறை இணை இயக்குநர் முதுகுளத்தூர் நைனா முஹம்மது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், இஸ்லாமிய அழைப்பாளர் கீழை எஸ்.எம். புஹாரி “தனி நபர் வாழ்வில் இஸ்லாம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அஸர் தொழுகைக்கு பிறகு தொடர்ந்த இரண்டாவது அமர்வில் தமிழக அரசின் முன்னால் கல்வித்துறை இணை இயக்குநர் முதுகுளத்தூர் நைனா முஹம்மது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், இஸ்லாமிய அழைப்பாளர் கீழை எஸ்.எம். புஹாரி “தனி நபர் வாழ்வில் இஸ்லாம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
தமுமுக துபை மண்டல துணைச்செயலாளர் பனைக்குளம் ஹைதர் நஸீர் துஆவுடன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிரைவு செய்தார். இது தமுமுக சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும், தவ்ஹீத் கொள்கை கொண்ட அனைத்து அமைப்பு சகோதரர்களும் ஒன்றிணைந்து பங்கு கொண்டு பயனுள்ள நல்ல கருத்துக்களை வழங்கியதிலும் அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் ஒன்றிணைந்து பயான் செய்ததிலும் அனைத்து சகோதரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். அதிரை ஜமால், கீழை மதார், மேலப்பாளையம் காஜா, திருச்சி அப்துர் ரஹ்மான் உள்பட பலரும் அபுதாபி, ஷார்ஜா, ஜபல்அலி, சோனப்பூர் என துபையின் பல பாகங்களிலும் வந்திருந்தனர். நிகழ்ச்சியினை கொடுங்கையூர் முஹைதீன் தலைமையிலான அணி மிகச்சிறப்புடன் செய்திருந்தது.
செய்தி மற்றும் படங்கள் :அபூஅவ்ன் மற்றும் தமிழ் சாரல்ஹாரீஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக