நிதின் காட்டேறி(கட்காரி )யின் உலறல்
இந்தூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லீம்கள் உதவ வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் அக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய அவர் கூறுகையில்,
ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியில் நிலத்தை முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தால் அருகில் பெரிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.அங்கு கோவில் கட்டிய பிறகு மற்றொரு பகுதியில் போதுமான நிலம் இருந்தால் அதில் மசூதி கட்டிக் கொள்ளலாம்.அயோத்தியில் மாபெரும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டால் ஒருவர் வெற்றி பெறுவதும் மற்றொருவர் தோற்பதும் உறுதி. அது தேவையில்லை.
பாஜக முஸ்லீம்களுக்கு எதிரான கட்சி என்பது தவறான கருத்து. முஸ்லீம்களுக்கு எதிரான கட்சியாக இருந்தால் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியிருப்பார்களா?.இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழவேண்டும். இவர்களில் யார் பின்தங்கினாலும் நாடு முன்னேற்றம் காண முடியாது.
ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் முஸ்லீம் சமூகத்தினர் ஒருமனதாக முடிவெடுத்து கோயில் கட்டுவதற்கு உதவினால் அது இந்து-முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்.முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக முடிவு எடுப்பதை அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக