வரதட்சனை ஒரு கெளரவ பிச்சை
உயர்ந்த கோபுரங்கள்
உள்ளங்களுக்கு இன்பம் தரும்
உள்ளே செல்பவர்களுக்கு
பக்திப்பரவச சுகம் தரும்
வெளியேறும் போது வீதிகளில்
அமர்ந்திருப்போர் தட்டுகள்
தட்டப்படும்....
தட்டுகளை வைத்திருப்போர்
தம் வயிற்றுக்காக வாழ்பவரே
எவருமே தன் மகளின்
கல்யானத்திற்காய்
கையேந்த வில்லை....
ஊசிமுனை தேவாலயங்கள்
வெள்ளியும் ஞாயிறும்
வீதிகளில் பெரும் கூட்டம்
பெருங்கூட்ட கையசைவை வேண்டிய
பிச்சைகாரர்கள்
வரிசை வரிசையாய்....
அந்தப் பிச்சையில் எவரும்
தன் பெண்மக்களின்
திருமனத்திற்காய்
பிச்சை கேட்கவில்லை....!
சிங்காரச் சென்னை முதல்
சீர்மிகு குமரி வரை....
முஹல்லா ஜமாஅத்துகளின்
அறிமுகக் கடிதத்தோடு....
பெண்களைப் பெற்றெடுத்த பிதாக்கள்
ஜூம்ஆக்கள் தோறும்
பிச்சை பாத்திரமாய் துண்டேந்தி....!
உயர்ந்த சமுதாயத்தில்
தாழ்ந்த பிச்சைக் கேட்புகள்
பிச்சை எடுப்பதைக்
கேவலமெனப் பேசும் சமுதாயத்தில்....
பிச்சைக்கான ஊக்குவிப்புகள் ஜமாஅத் கடிதமாய்
காரணம் வரதட்சணையால்....
பெண்களின் வாழ்க்கை
பாலைவனம் ஆனதுதான்....!
இஸ்லாமிய பிதாக்களை
இரக்கச் செய்த
ஈனச் செயல் ஏன் நடந்தது?
முஸ்லிம் குடும்பங்கள்
கன்னிப் பெண்களின்
பண்ணைகளானதற்கு
யார் காரணம்?
இஸ்லாமல்ல
இதற்கு காரணம்
ஈனப் பிறவிகள்
ஈமானற்ற இதயத்துக்குச்
சொந்தக்காரர்களாகிவிட்ட
ஈரமற்ற மூத்த சமுதாயமும்....!
பணத்தை பின்னுக்குத் தள்ளி
போராட முன்வராத
இளைய சமுதாயமும் தான்...!!
நன்றி – ருக்னுத்தீன்
சத்தியப் பேரொளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக