
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்கள் மறைந்து 38 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்ட நிலையிலும் ஒவ்வொரு தமிழர் இதயத்திலும், அவர் நிறைந்திருக்கிறார்.
இந்தியாவின் ஆட்சி மொழி ஆவதற்கு, அனைத்து தகுதியும், தொன்மையும், அழகும், நிறைந்த என் தாய்மொழி தமிழுக்கே உண்டு. என்று திறம்பட வாதம் புரிந்து அனைவரையும் வியப்படையச் செய்தவர்.
கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்கள், அரசியல் நிர்ணய சபையில், தமிழுக்காக வாதாடி 60 ஆண்டு நிறைபெறும் இந்த மணிவிழா குழுவில் அந்த தலைவரின் நினைவைப்போற்றும் வகையில், காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.
சிறுபான்மையினரின், கல்வி, பொருளாதார அரசியல், மேம்பாட்டுக்காக போராடும் களப்பணியாளர்களுக்கு அந்த விருதை வழங்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்கிறோம்.
காயிதே மில்லத்தின் கனவை நனவாக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக