
கடந்த 13 வருடமாக விசாரணைக் கைதிகளாக கொட்டடி சிறையில் வாடிய மூத்த சமுதாயத் தலைவர் குணங்குடி ஹனீஃபா, ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ், தடா அப்துர் ரஹீ்ம், குட்டி உட்பட 8 சிறைவாசிகள் 1997 நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி பூவிருந்த வல்லி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
இவர்களில் ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ் ஒரு சில வழக்குகளின் பிரச்னைக்கு பிறகு அடுத்த வாரம் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் விடுதலைக்காக எல்லா சமுதாய அமைப்புகளும் போராடின. அதிலும் குறிப்பாக தமுமுக கடும் போராட்டம் நடத்தியது. இம்மாதம் மே 5ஆம் தேதி கோரிக்கை பேரணி ஒன்றை நடத்தியது.

குணங்குடி ஹனீஃபாவை அவர் நிறுவனராக இருந்த தமுமுக அமைப்பு சிறையிலிருந்து மிகுந்த உற்சாக வரவேற்புடன் அழைத்து கொண்டு தமுமுக தலைமையகத்திற்கு சென்றது. அவரது 13 வருட தியாகத்திற்கு உற்சாக வரவேற்பின் மூலம் கண்ணியம் செய்தது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக