அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 26 ஜூலை, 2010

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: தமுமுக

திருவாரூர், ஜூலை 23: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமுமுக மாவட்ட செயற்குழுக்கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நாச்சிகுளம் எம். தாஜிதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. குத்புதீன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். சிறப்பு ஆயுத சட்டத்தை திரும்ப பெற வேண்டும். காஷ்மீர் எப்போதும் இந்தியாவோடு இணைந்திருக்க வழிவகை காண வேண்டும். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் புதைசாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெட்லைன் டூடே தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக