அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 10 ஜூலை, 2010

முத்துப்பேட்டை: மத நல்லிணக்க மாநாடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து இந்து- முஸ்லீம் பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும். இந்தப்பகுதியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அமைப்புகளும் ஒவ்வொரு முறையும் மத நல்லிணக்க மாநாடு பேரணீ பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம்.



கடந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் நல்லக்கண்ணு நடத்தினார். அதில் அனைத்து மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.அதே போல் இந்த ஆண்டு மதநல்லிணக்க கால்பந்து விளையாட்டுப்போட்டி, மாநாடு இன்று நடைபெறுகிறது. இப்போட்டி விழாவை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தொடங்கிவைக்கிறார்.



விழாவில் ஆருண், பி.வி.ராஜேந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மத நல்லிணக்க இளைஞர்கள் செய்துள்ளனர்.


நன்றி - நக்கீரன் இனையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக