புதுடெல்லி, ஜூலை. 30-
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த நவீன் சாவ்லா ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை டெல்லியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.
தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை.
தேர்தல் நடைபெற வேண்டிய காலத்துக்கு 6 மாதத்துக்கு முன்பு தான் நாங்கள் தேர்தல் குறித்து நடவடிக்கைகள் தொடங்குவோம்.
இந்தியாவில் ஓட்டு எந்திரம் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை நீக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரேஷி இந்தியாவில் 17-வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். 1971-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் அரியானா மாநிலத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக