ராமேசுவரம், ஆக. 7-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமதுரபீக் மனைவி ஜாஸ்மின்பானு (31). ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது குடும்ப வறுமை காரணமாக கடந்த 5-ந்தேதி ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீலை தொடர்பு கொண்டு ரூ.10 ஆயிரம் கடன் தரும்படி கேட்டேன். அவர் என்னை ராமேசுவரத்தில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறினார். அவரது பேச்சை நம்பி நான் ராமேசுவரம் சென்றேன்.
பஸ் நிலையம் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு வரசொன்னார். அங்கு நகரசபைத்தலைவர் ஜலீல் உள்பட 6 பேர் இருந்தனர்.

என்னை தனி அறைக்கு அழைத்து சென்ற ஜலீல் குளிர்பானம் குடிக்கும்படி வற்புறுத்தினார். நானும் குடித்தேன். சில நிமிடத்தில் மயங்கி விட்டேன். பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. சில மணி நேரம் கழித்து எனக்கு நினைவு வந்தது. அப்போது நான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்தேன்.
எனது உடலில் பல இடங்களில் சிகரெட் மற்றும் பீடியை பற்ற வைத்து சூடும் போட்டது தெரிந்தது. உடனே அவர்களிடம் என்னை இப்படி சீரழித்து விட்டீர்களே என்று கதறினேன்.
உடனே அவர்கள் 6 பேரும் என்னை தாக்கினர். உன்னை கற்பழித்து ஆபாசபடம் எடுத்து விட்டோம். நீ வெளியே சொன்னால் உன் ஆபாச படத்தை வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவோம் என்று மிரட்டினர். 2 நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து செக்ஸ்சித்ரவதை செய்தனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி ராமேசுவரம் போலீசுக்கு உத்தரவிட்டார். ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜேசு ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீல், டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் ரகுபதி, ஷேக், உதயகுமார், கேசவன் ஆகிய 6 பேர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஜலீல் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது கற்பழிப்பு, ஆபாசபடம் எடுத்து மிரட்டுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைதான நகரசபை தலைவர் ஜலீல் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது தந்தை ஜான்பாய் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக