அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது - ஹைதர் அலி

தென்காசி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது என்று கூறியுள்ளார் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி.

தென்காசியில் த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. குற்றம் செய்தவர்களுக்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் பேரமும் நடந்து வருகிறது. மேலும் காவல்துறை மிகவும் கேவலமாக உள்ளது.

பல முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்த பின்பும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இவைகளை வலியுறுத்தியும், த.மு.மு.க.வினர் மீது வேண்டுமென்றே பல்வேறு சம்பவங்களில் தொடர்பு படுத்தி வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கோரிக்கை பேரணி தடையை மீறி நடத்துவோம்.

நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கை மீறும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்பதை கூடன்குளம் ஐ.பி. கண்காணித்து வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக