அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 7 ஆகஸ்ட், 2010

அரபு நாடுகளில் கவுரவக் கொலைகளா?- கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் அறியாமை.- கண்டனத்தை பதிவு செய்வோம்

ஆக6:நேற்று(ஆக,5) கலைஞர் தொலைக்காட்சிக் குழுமத்தின் செய்திகள் அலைவரிசையில் ஒளிபரப்பான ஒரு மணியில் ஒருநாள் செய்தித் தொகுப்பில் இந்தியாவின் வட மாநிலங்களில் நடந்துவரும் கவுரவக் கொலைகள் தொடர்பான செய்தியில் கலந்துக் கொண்டு விளக்கமளித்தவர் அத்தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர்.

இவர் தனது பேச்சினூடே கவுரவக்கொலைகள் அரபு நாடுகளிலும் நடப்பதாக ஒரு பொய்யான செய்தியை பதிவு செய்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னையில் ஒருவர் தனது மகள் வேறொருவரை காதலித்தார் என்பதற்காக கொலைச்செய்த சம்பவத்தில் நக்கீரன் இதழில் கருத்துத் தெரிவித்த ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி இவர்கள் கூறிய இதே கூற்றைக் கூறியதால் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அவரால் அதற்கான எவ்வித ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

இந்நிலையில் கலைஞர் செய்திகள் அலைவரிசை இந்த முட்டாள்தனமான உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

ஒருக்கருத்தைத் தெரிவிக்கும் பொழுது அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். அரபுநாடுகளில் இஸ்லாமிய மார்க்கம்தான் அந்நாடுகளின் அதிகாரப்பூர்வ மதமாகும். இஸ்லாத்தில் ஜாதிகளே இல்லாத பொழுது கவுரவக் கொலைகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது அங்கு.ஆகவே இத்தகையதொரு அபாண்டமான செய்தியை ஒளிபரப்பிய கலைஞர் தொலைக்காட்சி மன்னிப்புக்கோர வேண்டும். இதனை கலைஞர் டி.வியின் கவனத்திற்கு கொண்டு சென்றால் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக