அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானி இன்று கைதாகிறார்

திருவனந்தபுரம், ஆக. 17-

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கேரளமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு கர்நாடகா ஐகோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது.
இதனையடுத்து கர்நாடகா போலீசார் கடந்த 7 நாட்களாக மதானி தங்கி உள்ள கொல்லம் அன்வாசேரியில் முகாமிட்டு உள்ளனர். கேரள போலீசாரின் உதவியுடன் மதானியை கைது செய்ய கர்நாடகா போலீசார் காத்து இருக்கிறார்கள்.


நேற்று பெங்களூர் இணை போலீஸ் கமிஷனர் அசோக்குமார், துணை கமிஷனர் ஓம்காரய்யா ஆகியோர் திருவனந்த புரம் வந்தனர். அவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கொல்லம் சென்றனர்.
ஆனால் மதானிக்கு காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததால் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை. மதானி கோர்ட்டில் சரண்அடை வார் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.


பெங்களூர் குண்டுவெடிப்பில் தன்னை கைது செய்யக்கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் மதானி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
மதானியை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று கர்நாடகா கோர்ட்டு விதித்த கெடு நெருங்கி விட்டதால் அவரை எப்படியும் கைது செய்து விடவேண்டும் என்று கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


ஆனால் கர்நாடகா போலீ சாருக்கு போக்கு காட்டி விட்டு கோர்ட்டில் சரண டைய மதானி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. ஆனால் அதற்கு முன் அவரை கைது செய்ய கர்நாடகா போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று இரவுக்குள் அவர் கைது ஆவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக