அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதம்

மாலேகான், அஜ்மீர் தர்கா,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், போன்ற இடங்களிலும் நாட்டின் முக்கிய நகரங்களிலும் நடைபெற்ற அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் மிக முக்கிய மூளையாக இந்த காவிக்கும்பல்தான் ஈடுபட்டு இருகின்றது என்று நான் சொல்லவில்லை மாவீரன் கர்கரே இந்த நாட்டிற்கு அம்பலபடுத்தினார். தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் கர்கரே அவருக்குபின்னால் வந்த ஒரு சில நியாயமான அதிகாரிகளும், ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஒரு சில நடுநிலையான பத்திரிக்கைகளும் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற அத்தனை குண்டுவெடிப்புகளுக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றன என்று தெள்ள தெளிவாக வீடியோ ஆதாரத்துடன் நிருபித்து கொண்டிருகின்றார்கள். போலி வேசமிட்டு கொண்டிருந்த காவி தீவிரவாதிகளின் பொய் முகத்திரை கிழிக்க பட்டு கொண்டிருக்கும் இந்த வேலையில் அதற்கு முத்தாய்ப்பாய் நமது நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கூறியிருப்பது காவி பயங்கரவாதிகளுக்கு பெரும் கலக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களின் கூக்குரலில் இருந்து வெளிப்படுகிறது.

ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்த காவிகும்பல்கள் எந்த அசம்பாவிதங்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க நமது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த காவிகும்பலின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து இவர்களின் சூழ்ச்சிகளை தடுத்து நிறுத்தி இந்திய தேசத்தை பாது காக்க முன்வரவேண்டும். இல்லையேல் மனிதநேயமிக்க இந்திய குடிமக்கள் இவர்களுக்கு எதிராக ஒன்றுகூட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.

மத்திய அரசு விழித்து கொள்ளுமா?

--- முத்துப்பேட்டை முகைதீன் ---

2 கருத்துகள்:

  1. சரியாக சொன்னீர்கள் இந்தியா முழுவதும் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காவி பயங்கரவாதிகள்தான் காரணம் என்று நாட்டின் உள்துறை அமைச்சரே சொல்லும் அளவுக்கு இன்று இறைவன் கொண்டுவந்திருகிறான் இன்னும் இறைவன் நாடினால் ஒட்டுமொத்த காவிகூடாரமும் மிக விரைவில் சட்டத்தின் முன்....

    பதிலளிநீக்கு
  2. முல்லை மைந்தன்.

    தாங்கள் சொல்லியிருக்கும் கருத்தை வரவேற்கின்றேன்.. உண்மையை தைரியமாக எடுத்துரைத்த உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களை பாராட்டுகின்றேன்.. "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை.. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் உண்மைகள் அழிவதில்லை...

    பதிலளிநீக்கு