மசூதி முன்பு இருந்த இந்துக்கோயில் இடிப்பு-மதக்கலவர அபாயம்: கோவை பதட்டம்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சண்முகா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர் முன்பு இருந்த செல்வவிநாயகர் கோயில் சாலை விரிவாக்கம் காரணமாக நேற்று இடிக்கப்பப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் உள்ள பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் 100 பேர் இன்று கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்திருந்தும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ‘’செல்வவிநாயகர் கோயில் முன்பு மசூதியும் இருக்கிறது. அதுவும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதுதான். மசூதியை இடிக்காமல் இந்து கோயிலை மட்டும் இடித்தது ஏன்?’’ கோஷம் எழுப்பினர்.
ஆர்.எஸ்.புரம் போலீசார் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் மதக்கலவரமாக மாறும் என்கிற அபாயம் இருப்பதால் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர் போலீசார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்புகள் கோவையில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று இரவு கோவை மாநகரம் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்ட முடிவு செய்துள்ளனர்.
பல வடிவங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் தயாராகி வருவதால் கோவையில் பதட்டம் நிலவுகிறது.
-- நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக