அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

மனிதம் செத்த இந்திய தேசம்!

இன்று நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி நம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. பிஹாரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வேதனையில் துடியாய் துடித்துள்ளார். அப்பாதையை கடந்த சென்ற எந்த ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் அப்பெண் ஒரு குழந்தையை பெற்று விட்டு வேதனை தாளாமல் இறந்தே போனார்.

புதிய உலகம் காண புறப்பட்டு வந்த மகவின் அழுக்குரல் கேட்டும் யாரும் வரவில்லை. வேதனையில் அழுது அழுது இறந்த போன தாய் ஒருபுறமும் பிறந்த சில மணித்துளிகளில் பசியால் துடித்த மகவு மறுப்புறம்.

போவோரும் வருவோரும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியாக ஒரே ஒரு பெண் அக்குழந்தையை தூக்கி எடுத்துக் கொண்டார். போலிஸிக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த பெண்ணின் சடலத்தை ஒரு வேனில் எடுத்துச் சென்றனர்.

வேலைத் தேடி பிஹாரிலிருந்து வந்த 22 வயதுடைய பெண், வேலையின்றி தெருவில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, பலரால் கெடுக்கப்பட்டு, இறுதியில் குழந்தையை பெறக்கூட வழி இல்லாமல் அதை அநாதையாக்கி விட்டு கண் மூடி போன கொடூரம் நடந்தேறியது.

அவசரகதியான இவ்வூலகில் மனிதம் இறந்ததால் ஒரு மனிதன் இறந்தான்.
யார் ஒரு உயிரை வாழ வைக்கின்றாரோ, அவர் மனித சமுதாயத்தையே வாழ வைத்ததற்கு சமமாவார் என்ற இறை வசனம் இந்திய முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.


ஆக்கம் : கீழை ஜமீல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக