அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

திருப்பதி கோவில் கட்டண சேவையில் ரூ.65 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிக்கை

நகரி, ஆக. 17-

திருப்பதி தேவஸ்தானத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஊழலை விசாரிக்கக்கோரி கீழ் திருப்பதியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு கால்நடை பயணம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இவர்களது கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தர விட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பதி கோவில் கட்டண சேவை டிக்கெட் விற்பனையில் ரூ.65 கோடி ஊழல் நடந் திருப்பது தெரிய வந்தது.

வஸ்திர அலங்கார சேவைடிக்கெட்டில் ரூ.30 கோடியும், சுப்ரபாதம், கல்யாண உற்சவம், நிஜபாத தரிசனம், அர்ச்சனை, தோமானா, விசேஷ பூஜை, திருப்பாவாடை ஆகிய சேவைடிக்கெட் விற்பனையில் ரூ.12 கோடியும், ஆன்லைன் மூலம் நடைபெறும் சேவை டிக்கெட் விற்பனையில் ரூ.23 கோடியும் ஊழல் நடந்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகள் விஜயா வங்கி மூலம் விற்கப்படுகிறது.

இதில் சில தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஆன்லைனையே நிறுத்தி விட்டு கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் ரூ.65 கோடி ஊழல் நடந்திருப்பதும், இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து சேவைடிக்கெட் விற்பனையில் மோசடி செய்துள்ளனர்.அவர்களின் பெயர், விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடவில்லை. இதுபற்றிய அறிக்கையை அவர்கள் ஆந்திர அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பதி கோவிலில் நடந்துள்ள ரூ.65 கோடி ஊழல் பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக