திமுக மத்திய அமைச்சர் அழகிரி இல்லத்தில் அழகிரி தலைமையில் திமுக எம்.பி களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் நமது முஸ்லிம் லீக் எம்.பி என்று சொல்லிகொள்ளும் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் திமுக எம்.பி களின் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? இபொழுது உங்களுக்கு விளங்கிருக்கும் திமுக எம்.பி யா, முஸ்லிம் லீக் எம்.பி யா என்று.

கீழே உள்ள படத்தில் திமுக தலைவரும் முதல்வருமான கலைஞர் தலைமையில் திமுக எம்.பி கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அங்கேயும் நமது சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டு தன்னை ஒரு திமுக எம்.பி தான் என்று நிருபித்திருகின்றார். என்பதற்கு கீழே உள்ள படம் எடுத்துகாட்டு.
சமுதாய சகோதர,சகோதரிகளே எதிர்வரும் காலத்திலேயாவது அரசியல்தளத்தில் முஸ்லிம்களின் தனித்தன்மையை நிரூபிக்க சமுதாயவாதிகளாய் சுயமுகவரியோடு தனி சின்னத்தில் போட்டியிடும் சகோத்தரர்களுக்கே எங்களது வாக்கு (ஓட்டு) என்று அழுத்தமாக உள்ளத்தில் நிலை நிறுத்திகொள்ளுங்கள் அதுவே சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இறைவன் நாடினால்...
இனியும் முஸ்லிம் லீக் சுய சின்னத்தில் போட்டியிடாமல் இறவல் சின்னத்தில் போட்டியிட்டால் சமுதாயமே அவர்களை புறக்கணிக்க தயாராகுவீர்!!
முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சரியான அரசியல் தளம் மனிதநேய மக்கள் கட்சி என்பதை ஒவ்வொரு தளத்திலும் நிருபித்து கொண்டிருகின்றது. சமுதாய மக்களின் ஓட்டும் மனிதநேய மிக்கவர்களின் ஓட்டும் இனிவரும் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிகே என்பதை நிரூபிப்போம்.
-- முத்துப்பேட்டை முகைதீன் --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக