
என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியே தீருவோம் என, ராமகோபாலன் கூறினார்.
கோவை காந்தி பார்க் ஏ.கே.எஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று செய்தியாளர்களை இந்து முன்னணி மாநில தலைவர் ராமகோபாலன் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்போது கோவை எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மத மோதல்களை இஸ்லாமியர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். தென்கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென்கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்துவிடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென்கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.
சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் 60 சதவீதமாக கிருஸ்தவர்கள் மாறிப்போனார்கள். 40 சதவீதமே பௌத்தவர்கள் இருக்கின்றனர்.
அதேபோலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன. அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.
அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி லவ் ஜிகாத் என்ற முறையில் அவர்களை இஸ்லாம் முறைக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.
முதல்வர் கருணாநிதி திருந்திவிட்டார். அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தபொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார்.
சொராபுதீன் என்ற ஒரு பயங்கர தீவிரவாதி, இங்கு கோவையில்தான் இருப்பதாக தகவல்கள் வருகிறது. அவன் இங்கே பலருக்கு துப்பாக்கி பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறான் என்ற தகவலும் இருக்கிறது. அவன் இருக்கும் இடத்தை காவல்துறையினருக்கு நிச்சயம் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்களால் அவனை கைது செய்ய முடியாது. ஏனென்றால் இங்கே காவல்துறை அதிகாரிகளுக்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. காவல்துறை அதிகாரிகளையே இஸ்லாமியர்கள் அடிக்கிறார்கள். தற்போது கூட கோவையில் ஒரு எஸ்.ஐ. இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். கல்லூரிகளில் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இவ்வாறு ராமகோபாலன் கூறிருக்கின்றார்.
--- நக்கீரன் --
தமிழக முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள் ராமகோபாலன் போன்றவர்களையும் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவிலை கட்டத்துடிக்கும் ஹிந்துத்துவவாதிகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக