
ஹிந்து பயங்கரவாத இயக்கமான ஸ்ரீ ராம சேனாவை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் முத்தலிக் கலவரத்தை தூண்டுவதற்காக பணம் கொடுத்ததை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதை அடுத்து காங்கிரஸ் இந்த கோரி்க்கையை விடுத்துள்ளது. கர்நாடக அரசு இந்த அமைப்பின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதத்தை பயன்படுத்தி கலவரத்தை உருவாக்க நினைக்கும் அனைத்து அமைப்புகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத் தெரிவித்துள்ளார். இதுவரை ஸ்ரீ ராம் சேனாவுக்கு மன ரீதியாக ஒத்துழைப்பு தந்தவர்களும் தற்போது இந்த அமைப்புடன் தங்களுக்கு தொடர்பில்லை எனக் கூறினாலும் மக்கள் உண்மையை உணர்ந்தே உள்ளனர் என ஷகீல் அஹமத் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும்போது அரசு ஹிந்து மற்றும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்பு தீவிரவாதம் என்றாலே முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள்தான் என்ற நிலை மாறி 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு ஹிந்து தீவிரவாத அமைப்புகள் மீது வெடிகுண்டுகளை பயன்படுத்துவது சம்பந்தமாக வழக்குகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் சம்பந்தமான அனைத்து வழக்குகளும் தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக