கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!! நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...
S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...
என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர். மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக