அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 15 ஜூன், 2010

.த.ஜ (+/-) தமுமுக = ஜூலை நான்கு ????? மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க ஜூலை நான்கு மாநாட்டில் உறுதிமொழி எடுக்க த.த.ஜ முன் வர வேண்டும்.

இந்தியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட சிறு பான்மை சமுதாயமாக நம் இஸ்லாமிய சமுதாயம் இருந்து வருகிறது. ஒரு இறை ஒரு மறை பேசும் நம் சமுதாய மக்களிடையே உள்ள பிரிவினைகளை பட்டியலிட்டால் மாளாது. நம்மில் ஒற்றுமை இருந்தால் வீதி இறங்கி போராடும் அவல நிலைக்கு நாம் தள்ளபட்டிருக்க மாட்டோம். ஒரு பிரச்சனைக்கு பல அமைப்புகள் தனி தனியே குரல் கொடுக்கும் நிலை மாறி, ஒரு பிரச்சனைக்கு ஒரே குரல் ஆனால் ஒன்று பட்ட குரலாக ஒலிக்குமேயனால் இன்ஷா அல்லாஹ் சிறுபான்மை சமுதாயமாக இருந்தாலும் எதையும் சாதிக்கும் சமுதாயமாக நம் இஸ்லாமிய சமுதாயம் விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


மனிதன் மிகவும் பலவீனமான படைப்பாகவே படைக்கப்பட்டுள்ளான் மேலும் ஆதமுடைய மக்கள் தவறு செய்யும் மனப்பாங்கையும் பெற்றுள்ளான், இதுவே இறைவனின் படைப்பின் விதியும் ஆகும். எனவேதான் இறைவனும் அவனது தூதர் நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அலைகி வசல்லம் அவர்களும் நாம் செய்த தவறுக்காக தவ்பா செய்து பாவதில் இருந்து மீளுமாறு கற்றுதந்துள்ளார்கள்.





சத்தியத்தையும் ஏகத்துவத்தையும் போதிக்கும் நம் பலரில் எத்தனைப்பேர் இவ்வாறு நாம் செய்யும் தவறுக்கு தவ்பா செய்து நம்மை திருதிக்கொண்டோம் என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.





கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நம் இஸ்லாமிய சமுதாயத்திற்காக TNTJ சமுதாய அக்கறையுடன் ஜூலை 4 மாநாட்டை அறிவித்திருக்கும் இந்த வேலையில் பல சகோதரர்கள் சில கேள்விகளை எழுப்புகின்றனர். கடந்த "2009 " நாடாளு மன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய மனித நேய மக்கள் கட்சியை கடுமையாக "TNTJ " எதிர்த்தது என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.




ஆனால் அதற்க்கும் TNTJ தரப்பிலிருந்து பல காரணங்கள் கூறபட்டாலும் அது நம்மிடையே உள்ள ஒற்றுமை இன்மையையே வெளிக்காட்டியது. அவர்கள் அந்த நேரத்தில் எடுத்த அந்த முடிவு சரியா அல்ல தவறா என்று இப்போது ஆராய்ந்து எந்த பயனும் இல்லை.





அப்படி ஆராய முற்பட்டால் ஒற்றுமைக்கு பதில் பல CD க்கள் தான் வெளிவரும், எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் எதிர்வரும் ஜூலை 4 மாநாட்டை, பிரித்து கிடக்கும் பல இயக்கங்களின் ஒற்றுமைக்காக பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.




எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருந்தாலும், தான் சார்த்த இயக்க விதி, கோட்பாடுகளை விட, நாம் ஈமான் கொண்டுள்ள இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.




நாயகம் (ஸல்) அலைகி வசல்லம் அவர்கள் வலியுருதிக்கூரிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் களைந்து ஒன்றுபட இந்த மாநாட்டை அணைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.





அடுத்த ஆண்டு 2011 ல் சட்ட மன்ற தேர்தல் வரும் வேலையில் இந்த ஜூலை 4 , மாநாட்டை நம் சமுதாயதிற்க்கு பயனுள்ளதாக அமைதுக்கொல்வதிலேயே நம் புத்திசாலித்தனம் அமைத்துள்ளது.





இந்தியாவை பொறுத்த வரையிலும் சரி, தமிழகத்தை பொறுத்தவரையும் சரி இஸ்லாமியர்களை குனிய குனிய குட்டும் போக்கே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.





இந்திய/தமிழக அரசியல் வட்டாரத்தில் பிஜேபி நம் நெஞ்சில் குறிவைத்தால், மற்ற கட்சிகள் நம்மை முதுகில் குத்து பவர்களாகவே உள்ளனர். இதுவரை மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும்,





எதிர்வரும் சட்ட மன்ற தேர்தலில் ஒட்டுமொத இஸ்லாமிய சமுதாயமும் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களித்து, இஸ்லாமியர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க, வேற்றுமை, பகைகளை மறந்து இந்த ஜூலை 4 , மாநாட்டில் உறுதி மொழி ஏறக்க TNTJ முன்வர வேண்டும்.




குள்ள நரிகளுக்கு இஸ்லாமியர்கள் ஒன்று கூடினால் நாடு தாங்காது, இனியும் ஏமாற்று, பித்தலாட்ட வேலைகள் பலிக்காது என்று உணர்த்திட வேண்டும்.கூனிக்கிடக்கும் நம் இஸ்லாமிய சமுதாயம், தலை நிமிர்ந்து வெகுண்டு எழ அரசியல் அரங்கில் தலை நிமிர்ந்திட இந்த அறிய வாய்ப்பை சம்பத பட்ட தலைவர்கள் பயன்படுதிக்கொள்ளவேண்டும்.
(இன்ஷா அல்லாஹ்).



குறிப்பு:
நான் எந்த ஒரு அமைப்பையும் சாராதவன். ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் காட்டிகொடுத்தும்,எலும்பு பொறுக்கிகளாகவும் இருந்த பார்பனர்கள் இன்று உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு நமக்கு தீவிரவாதி என்று முத்திரை குத்துகின்றனர். பொருள், கல்வி, குடும்பம் என அனைத்தையும் சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்த நம் சமுதாயம் இன்று அடிப்படை உரிமைகளை பெறவே அடி உதைகள் வாங்கி, என் சகோதர சகோதரிகள் வீதியில் இறங்கி போராடும் அவல நிலையை சகித்துகொள்ள முடியாத ஒரு சராசரி "சமுதாய நல விரும்பி" என்ற அடிப்படையில் என் கருத்தை இங்கே பதித்துள்ளேன்.

யா அல்லாஹ் எங்கள் இதயங்களில் வேற்றுமைகளை கலைத்து, சகோதரத்துவம் மலர அருள் செய்வாயாக.
ஆமீன்.

-கிளியனூர் ஷைக் தாவூத்-
அபு தாபி

Shaik Dhawood
Mobile: +971 50 3017 495

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக