'இதயம்' சில ஆச்சரியமான உண்மைகள்!
மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும். இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது.
இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது.இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால்கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல் பெற்றது.
ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது. ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது.
இந்த அளவில் கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு.இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது.
இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 காலன் கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம். ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக