அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 7 ஜூலை, 2010

முஸ்லிம்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கினால் நாடு தழுவிய போராட்டம் - பி.ஜே.பி. சவடால்

பெங்களூர்:ரங்கநாத மிஸ்ரா பரிந்துரையின் படி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு 15% இடஒதுகீட்டை மத்திய அரசு வழங்கினால், நாடு தழுவிய போராட்டங்கள் வெடிக்கும் என்று பி.ஜே.பி முஸ்லீம்களை சீண்டிப்பார்த்துள்ளது.



முஸ்லிம்களின் இடஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை பாதிக்கும், மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால்,நாங்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்த நேரும் என்று பி.ஜே.பி தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.




பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்களுக்கான மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய அவர், மிஸ்ரா அறிக்கை குப்பைத் தொட்டியில் போடக் கூடியது என்றும், இது நம் ஹிந்து சமுதாயத்தை பாதிக்கும் என்றார்.கட்காரியின் பேச்சை முன்மொழிந்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்க் சவ்ஹான், ஹிந்து சமுதாயத்தின் உரிமைகளை திருடி முஸ்லிம்களுக்கு அளிப்பதை பி.ஜே.பி ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.




அவரை தொடர்ந்து பேசிய கர்நாடக முதல்வர் எடியுரப்பா பேசுகையில், கடந்த அரசு ஒதுக்கிய 640 கோடிக்கு பதிலாக பி.ஜே.பி. ஹிந்து சிறுபான்மையினருக்கு 1000 கோடி ஓதிக்கியுள்ளதாக தெரிவித்தார். மாநாட்டில் தலித்கள் உட்பட சுமார் 5000 ஹிந்து சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக