அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 17 ஜூலை, 2010


போலி மோதல் (என்கௌண்டர்) கொலைகளுக்காக டெல்லி காவலர் இருவருக்கு ஆயுள் தண்டனை

2006 ஜுலை 31 ஆம் நாள் ஜுல்ஃபிகார் (28) நஸாகத் (26) ஆகிய இரு முஸ்லிம் இளைஞர்களை காஸியாபாத் நீதிமன்றத்திலிருந்து திரும்ப அழைத்துச் செல்லும் வழியில் டில்லி (வடக்கு) பகுதிக் காவலர்கள் மூவர் திமர்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். பின்னர் இந்திய காவல்துறையினரின் வழமையான பல்லவியான என்கௌண்டர் மோதல் கொலையில் இரு கைதிகள் கொல்லப்பட்டதாக கதை கட்டி விட்டனர்.

கொலையாளிகளின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜுலை 15 அன்று (சரியாக 4 ஆண்டுகளுக்குப் பின்) தீர்ப்பளித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேஷ் ஷர்மா அவர்கள், 'குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி காவலர்கள், அஷோக்குமார், சுராஜ்பால் மற்றும் சுதேஷ்ராணா ஆகிய மூவரும் நிகழ்த்தியுள்ளது போலி மோதல் கொலைகளாகும். போலிஸார் மத்தியில் வளர்ந்து வரும் குற்ற நடத்தைகளை இந்த வழக்கு பிரதிபளிக்கிறது. எனவே இம்மூன்று காவலர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளிப்பதுடன், அஷோக்குமாரும் சரேஷ்பாலும் தலா 1.3 இலட்சம் ரூபாயும், சதேஷ்ராணா 1.5 இலட்சம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2008 செப்டம்பரில் நிகழ்த்தப்பட்ட பாட்லா ஹவுஸ் போலி மோதல் கொலை தொடர்பாக, நீதிமன்ற விசாரணையை, 'காவலர்களின் நடத்தைக்கு களங்கம் விளைவிப்பவை' எனக்கூறி ஊடகங்களின் பார்வையிலிருந்து மறைத்து வரும் டெல்லி போலீஸ் இந்த தீர்ப்பு பற்றி என்ன செய்வது எனப்புரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.ஜாமியா நகர் பகுதியில் வைத்து கொல்லப்பட்ட ஆஸம்நகர் இளைஞர்களான ஆதிஃப் மற்றும் ஸாஜித் குடும்பத்தினருக்கு இத்தீர்ப்பு நம்பிக்கையூட்டப்படக் கூடியதாக உள்ளதென தெரிவித்தனர்.

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட அனைத்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைக்கும் இதே ரீதியிலான கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், அப்பாவிகளின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் போலி என்கௌண்டர் நாயகன் நம்ம ஊர் வெள்ளத்துரைக்கும் கூட இது போன்ற தண்டனை கிட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக