அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 17 ஜூலை, 2010


மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்பு - ஆர்எஸ்எஸ் தொடர்பு ஆதாரங்கள் மறைக்கப்படுகின்றனவா?

புதுதில்லி : சமீபத்தில் சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அஷோக் பெர்ரி மற்றும் அஷோக் வர்ஷினி ஆகியோருக்கு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவந்தர் குப்தாவுடன் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட இரு மூத்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மாத்திரமல்லாமல் இந்திரேஷ் குமார் அல்லது இந்தரஜித் என அழைக்கப்படும் உத்தரபிரதேச மூத்த நிர்வாகியும் மேலும் 12 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் அஜ்மீர் மற்றும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களின் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் தாங்கள் இவ்விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் ஆனால் இதை காரணமாக வைத்து களங்கம் ஏற்படுத்த முயல கூடாது என்றும் கூறினார். 9 நபர்களின் உயிரை குடித்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நடந்த ஹைதராபாத்தில் ஜூன் 25 - 29 நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியான தேவந்தருக்கு பெர்ரி மற்றும் வர்ஷினி வெடிபொருள் வாங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளனார். மேலும் இம்மூவரும் இக்குண்டுவெடிப்பு சம்பந்தமாக கான்பூர், ஃபைஸாபாத், அயோத்தியாவில் கூடி பேசியுள்ளதும் இந்திரஜித் இவர்களை வழிநடத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் இவ்விசாரணைகளை சி.பி.ஐ இது வரை பகிரங்கப்படுத்தாதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைமைக்கு தொடர்பில்லையென்றால் ஏன் இந்த ஒரு விஷயத்துக்காக தில்லி மற்றும் ராஜஸ்தானில் கூடினர்? மேலும் சாத்வி பிரக்யா தாகூருக்கு இவர்களுடன் உள்ள தொடர்பு ஏன் விசாரிக்கப்படவில்லை என்பது போன்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் பல உள்ளன. உண்மையில் சட்டம் தன் கடமையை செய்யுமா அல்லது வாக்கு வங்கி அரசியலுக்கு பணிந்து வழக்கம் போல் கண்டும் காணாமல் சி.பி.ஐ போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆர்.எஸ்.எஸ் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பதையும் நாடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

Source: inneram -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக