அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 19 ஜூலை, 2010


தமிழ்நாட்டில் பணியாற்ற வாய்ப்பு தந்த கடவுளுக்கு நன்றி. -தலைமை நீதிபதி இக்பால்.

வேலூர் மாவட்டம், ராணிபேட்டையில் தற்போது உள்ள நீதிமன்ற கட்டிடங்களுக்கு பின்புறத்தில் ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கான கல்வெட்டை சென்னை ஐகோர்ட்டு தலைமை நிதி எம்.ஒய். இக்பால் திறந்து வைத்து கூறியது:-

சென்னை ஐகோர்ட்டு கட்டிடம் பழமையான வரலாற்று சிறப்புமிகுந்த கட்டிடமாக உள்ளது. அதே போல ஐகோர்ட்டு மதுரை பெஞ்சும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணிபுரிவதற்க்கு வாய்ப்பு தந்த கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் நீதித்துறைக்கு அரசின் சார்பில் ஏராளமான உள்கட்டமைப்பு, வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது.


நீதிபதிகளுக்கு வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் வரும். கோர்ட்டு புறக்கணிப்பால் இளம் வக்கீல்கள் பாதிக்கப்படுவார்கள். தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் தயாராக உள்ளனர். அதற்கு வக்கீல்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கோர்ட்டு புறக்கணிப்பு சட்ட விரோதம் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. எனவே வழக்குகளை விரைவில் முடிக்க வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பை கைவிடவேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க விடுமுறை நாட்களிலும் கோர்ட்டு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டையில் முன்சிப் கோர்ட்டு உள்ளது. ஆனால் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் கோர்ட்டு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.


நான் சென்னை சென்றவுடன் முன்சிப் கோர்ட்டிலேயே கிரிமினல் வழக்குகளை விசாரிக்க வழிவகை செய்யப்படும். ராணிப்பேட்டையில் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் குடும்ப நல கோர்ட்டு கேட்டுள்ளனர்.தேவைகளை எல்லாம் உரிய பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக