அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 19 ஜூலை, 2010

'மதானிக்கு மீண்டும் நீதியை மறுக்காதீர்கள்'- மனித உரிமை ஆர்வலர்கள்

கொச்சி:'மீண்டும் ஒருமுறை மதானிக்கு நீதியை மறுக்காதீர்கள்' என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.மூத்த மனித உரிமை ஆர்வலரான நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா அய்யரும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.





இவர்கள் வெளிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'ஏற்கனவே விசாரணை காலத்திற்காகவே மதானி சிறையில் 10 வருடத்திற்கு மேல் கழித்த நிலையில், அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இச்சூழலில், தற்போது அவரை மீண்டும் கைது செய்துள்ளதின் மூலம் ஜனநாயகம், போலீஸ் மற்றும் உளவுத்துறைகளின் மேல் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாது கோபத்தையும் ஏற்படுத்தும்.இது ஒட்டுமொத்தமாக ஜனநாயகம் அழிவதற்கோ அல்லது பின்பற்றாமல் போவதற்கோ காரணமாக அமையலாம். ஊனமுற்ற ஒரு தலைவரை எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைப்பது நியாயமல்ல என்று கூறியுள்ள ஆர்வலர்கள், இது போன்ற நடவடிக்கைகள் தான் தீவிரவாதத்தை உருவாக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ஆகவே,அனைத்து சமூக ஆர்வலர்களும்,தொண்டு இயக்கங்களும் மதானி விடுவிக்கப்படுவதற்காக பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இக்குழுவில்,நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா அய்யர், நீதிபதி பி.கே.சம்சுதீன்,டாக்டர் பலராமன், பி.ஆர்.பி. பாஸ்கர், டாக்டர் நீலலோஹித தாசன் நாடார், பேராசிரியர் கே.எம். பகவுட்டீன், க்ரோ வாசு, ஒ.அப்துல் ரெஹ்மான், சி.ஆர். நீலகண்டன்,சிவிக் சந்திரன், வக்கீல் பி.எ.பெரன், ஜ.தேவிகா, லஹா கோபாலன், கே.கே.கோசு மற்றும் வயலார் கோப்குமார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பில்,31-வது குற்றவாளியாக மதானி கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வரமுடியாத வாரன்ட்டில் மதானி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.முன் ஜாமீன் மனு கீழ் நீதி மன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மதானி ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக