
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷனின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று காலை கூடி ஆலோசித்தது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் லிபரான் அறிக்கையை தாக்கல் செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் சில அம்சங்கள் நேற்று ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து லிபரான் கமிஷன் விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி பா.ஜ.க. நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டது. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக