அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 23 நவம்பர், 2009

லிபரான் அறிக்கை அறிக்கை வெளியான விவகாரம்: மக்களவையில் புயல்



லிபரான் கமிஷன் அறிக்கை விவரங்கள் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று அமளி ஏற்பட்டது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி லிபரான் கமிஷன் விசாரித்து வந்தது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கமிஷன் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. எனினும் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், லிபரான் அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்து ஆங்கிலப் பத்திரிகையொன்றில் இன்று செய்தி வெளியானது. பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பாபர் மசூதி இடிப்பில் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று மக்களவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி இந்த விவகாரத்தை எழுப்பினார். லிபரான் அறிக்கையை உடனடியாக அவையில் தாக்கல் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதையடுத்து, பேசிய முலாயம் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் அறிக்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக