அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 2 ஜனவரி, 2010

அத்வானியை தூக்கி எறிந்த ஆர்.எஸ்.எஸ்


பாரதீய ஜனதாவின் மூத்த தலை வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலை வருமான லால்கிஷன் அத்வானியை அவரது கட்சி வெளியேற்றி விட்டது.
பாரதிய ஜனதா கட்சியை இந்தியாவின் முன்னணி அரசியல் கட்சியாக்க மிகுந்த சிரமம் (!) எடுத்து மக்களை பிளவுபடுத்தி ரத்த ஆறு ஓடச்செய்து அப்பாவி மக் களை வெறியேற்றி வாக்குகளை அறு வடை செய்ய உதவிய அத்வானிக்கு இந்த நிலையா? என பா.ஜ.க.விலுள்ள தீவிர அத்வானி ஆதரவாளர்கள் திகைக் கின்றனர்.
1985-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த­ல் பா.ஜ.க.வுக்கு இரண்டே இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளே கிடைத்தன.பா.ஜ.க.வுக்கு மேல்தட்டு மத வெறியர்களின் கட்சி என்றும், அது நடுத்தர மக்களுக்கான கட்சி அல்லவே அல்ல என்றும் இந்தியாவில் தீவிர ஹிந்த்துவ உணர்வு உள்ள வர்களைக் கூட பா.ஜ.க.வைக் கண்டால் ஒதுங்கி போக செய்தது அன்று கட்சியை நடத்தியவர்களின் நடவடிக்கை.
ஆனால் காலம் செல்ல செல்ல பா.ஜ.க. அனைத்து தட்டு மத வெறி யர்களுக்குமான கட்சி என அத்வானி மாற்றிக்காட்டினார். பா.ஜ.க. நாட்டைக் கெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது என்றால் அந்த அளவிற்கு அரசியல் சூழ்நிலையை நாகரீகத்தைக் கெடுத்த புண்ணிவான் (!) அத்வானி தான் என்பதை சரித்திர சம்பவமாக மாறிப்போனது. 2லி­ருந்து 88. 88லி­ருந்து 200ஐ தாண்டும் அள விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அத்வானி தமது அய ராத மத வெறியால் உயர்த்திக்காட்டினார்.கடின உழைப்போ அரசியல் வியூக மோ, மதவெறியை விசிறி விட்டு கட்சி யின் தீவிர குண்டர்களை எப்போது உசுப்பேற்றி விடும் செயல் திறனோ (?) என எத்துனை செய்து என்ன பயன்?பா.ஜ.க.வும் ஆட்சிக்கு மிக அருகில் செல்லும் நேரம் வந்தது.
அப்போது பா.ஜ.க.வின் உசுப்பும் தலைவர் அத் வானி ஓரங்கட்டப்பட்டார் மாநில வாரியாக ஊர் ஊராக பா.ஜ.கலிவின் பெருமையை (!) கொண்டு சென்ற போது அத்வானி தீவிரமுகம் கொண்டவராகத் தோன்றவில்லை.ஆட்சி அதிகாரம் என்று வரும் போது அவாள்களின் கூடாரத்தி­ருந்து ஒரு அடல் உதிக்கிறார். ஆம் அடல்பிஹாரி வாஜ்பாய் தான் பா.ஜ.க.கூட்டணியின் பிரத மராக வரமுடியும் என சங்பேர்வழிகள் முடிவு கட்டினார்கள்.
அவாள்கள் வீட்டில் அவதரித்ததால் வாஜ்பாய்க்கு அரசின் உயர்பதவியான பிரதமர் பதவி. அவாள்களின் வீட்டுப் பிள்ளை அல்ல என்பதால் அத்வானிக்கு அல்வா. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அத்வானிக்கு துணைப் பிரதமர் பதவி கொடுக்கப்பட்டது. எல்லா இடத்திலும் வாஜ்பாயின் பெயரே வியாபித்தது.ஆட்சியில் இல்லாத போது முன் னிலைப் படுத்தப்பட்ட அத்வானியின் பெயர் பா.ஜ.க. ஆட்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் மிகச் சிறுபான்மை சமூகமான சிந்தி சமூகத்தைச் சேர்ந்த அத்வானிக்கு அடையாளமே மதவாதம் தான் என்ற நிலையிலும் மதவாதிகளின் உயர் பீடமான பா.ஜ.கலிவோ பா.ஜ.க-வை ஆட்டிப்படைக்கும் எஜமான அமைப்பான ஆர்.எஸ்.எஸ். úஸா அத்வானியை ஒரு பொருட்டாக கருதவே இல்லை.உதார ணங்களுக்கு அதிக காலங்கள் பின்னோக்கி செல்ல வேண்டாம். பாபர் மஸ்ஜித் தகர்ப்பு குறித்து ­லிபரான் ஆணையம் குற்றவாளிகள் என சுட்டிக் காட்டியவர்களில் முக்கியமானவர்களாக வாஜ்பாயும், அத்வானியும், குறிப்பிடப்பட்டிருந்தனர்.
சங்கும்பல் உடனடியாக வெகுண்டு எழுந்தது. பாப்பரி மஸ்ஜித் தகர்ப்பில் வாஜ்பாய்க்கு தொடர்பு உண்டு எனக் கூறுவதா? என வெகுண்டனர். இது வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் என குதியோகுதி என குதித்தனர்.கூழும் குடிக்க வேண்டும் மீசையும் நனையக்கூடாது. மஸ்ஜிதும் தகர்க்கப்பட வேண்டும். ஆனால் அதன் பழியை தங்களின் பாசத் திற்குரியவர்கள் சுமக்கக்கூடாது. என்றே வாஜ்பாயைக் குறை கூறும்போது மட்டும் கொதித்தெழுந்தார்கள்.பாஜக மவுசு இழந்ததோடுவிடாமல் அத்வானியை ஒட்டுமொத்தமாக காலி­ செய்தது. பாஜகவின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அத்வானியை வெளியேற்றி விட்டது.
அத்வானியை எதிர்க்கட்சித் தலைவர் பதவிலியி­ருந்து விலக்கிய ஆர்.எஸ்.எஸ்., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா சுவராஜை அறிவித்திருக்கிறது.பாஜகவின் தலைவராக மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் தயாரிப்பான நிதின்கட்காரி தீவிர ஹிந்துத்துவ கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்வானி மார்க்தர்ஷக் (கட்சியின் வழிகாட்டி)யாக செயல்படுவார் என சங் அமைப்புகள் அறிவித்துள்ளன. மொத்தத்தில் ரத்த யாத்திரை நடத்திய அத்வானியின் அரசியல் யாத்திரை முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்று கிறது. மொத்தத்தில் அத்வானியின் அரசியல் அஸ்தமனத்திற்கு அனைத்து இந்தியர்களும் இரங்கல் பா வாசிக்கும் நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
-ஹபீபா பாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக