அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 16 ஜனவரி, 2010

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு.


மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகர பொதுக்குழு 15/01/2010 அன்று மாலை 4 மணிக்கு முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் இறைவனின் மிகப்பெரும் கிருபையினால் நடைபெற்றது.
முத்துப்பேட்டை நகர் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் கொடிகள் பட்டொளி வீசி பறந்து பொதுக்குழுவிற்கு வரும் அணைவரையும் வரேற்று கொண்டிருந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.M.தமீமுன் அன்சாரி.MBA., அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.இப்பொதுக்குழுவில் பிற மத சகோதரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சகோ.M.முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சகோ.A.முஹம்மது அலீம்.BBA., தமுமுக நகர செயலாளர் சகோ.வழக்கறிஞர்.L.தீன் முஹம்மது.BSC.,BL., ஆகியோர் முன்னிலை வகிக்க மனிதநேய மக்கள் கட்சியின் தற்காலிக நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அல்ஹம்மதுலில்லாஹ்...)



நகர செயலாளர் – சகோ.M.அஹமது அலி

நகர துணை செயலாளர் – சகோ.K.M.அப்துல் அஜீஸ்
சகோ.மன்சூர் அலி


நகர பொருளாளர் – சகோ.முஹம்மது ஆரிப்

நகர இளைஞர் அணி செயலாளர் – முபாரக் கான்

நகர தொழிற் சங்க செயலாளர் – சகோ.மாணிக்கம்

நகர செய்தி தொடர்பாளர் – நிஸார் தீன்

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக தற்காலிகமாக நகர செயலாளராக பொறுப்பு வகித்த சகோ.M.முஹம்மது மன்சூர் அவர்கள் நன்றிகூர துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.




கீழ்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

1. முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்றுவரும் நிர்வாக சீர்கேட்டை கண்டிப்பதோடு அதனை போர்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டுமென பேரூராட்சி மன்றத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.



2. முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மண்டல வரிவிதப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் தொன்று தொட்டு நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. அதை கலைவதற்கு பல்வேறு தடைவை கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இதுவரை சரிசெய்யாத முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத்தை இப்பொதுக்குழு வண்மையாக கண்டிக்கின்றது.


3. முத்துப்பேட்டையில் நிலவிவரும் கேஸ் தட்டுபாட்டை கண்டிப்பதோடு அதை சரிசெய்வதற்கு முத்துப்பேட்டையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதன்மூலம் முத்துப்பேட்டை முழுவதும் சரியான முறையில் வினியோகம் செய்ய வேண்டுமாய் சம்மந்தப்பட்ட நிறுவனத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.



4. இம்மாதம் 24 ம் தேதி திருவாரூரில் நடைபெற இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் முதல் அரசியல் மாவட்ட மாநாட்டிற்கு முத்துப்பேட்டையில் இருந்து அதிகமான மக்களை திரட்டி சென்று பங்கெடுக்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


பொதுக்குழுவில் கலந்து கொண்ட அணைவரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் சிறப்புடன் செயல்பட ஏக இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கலைந்து சென்றனர்.


தொகுப்பு – முத்துப்பேட்டை முகைதீன்

புகைப்படம் – முத்துப்பேட்டை அலீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக