
உணவு பொருட்களுக்கான விலை தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.எந்தப் பிரச்சனையானாலும் அது குறித்து விவாதிக்க நமது அரசு தாயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கத் தவிக்கும் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு தயார் என அறிவித்திருக்கிறார்.அது மட்டுமின்றி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவினை எதிர்க்கட்ச்சிகள் விமர்சிக்கின்றன.

மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நீதியரசர் ஜாகிர் அஹமது கமிஷன் பரிந்துரைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.இதில் காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பான முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
இலங்கை தமிழர் பிரச்சனையில்,இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுப்பணிகளில் இந்தியாவின் உதவிகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதே போன்று பாதுகாப்புப் படையினரின் முகாம்களைத் தாக்கும் அளவிற்கு மாவோயிஸ்டு தாக்குதலின் வீரியம் தீவிரம் அடைந்துள்ளது பற்றியும் புனேயில் நடந்த குண்டுவெடிப்பில் பல்வேறு சந்தேகங்களையும்,கவலையையும் அதிகப்படுத்தியுள்ளது.மத்திய அரசு விசாரனை நடத்தி உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆசையாகும்.
சதிகாரர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு புனே குண்டு வெடிப்பில ஹிந்துத்துவா சக்திகள் பின்னணியல் இருக்ககூடும் என்ற சந்தேக் கருத்துகளை சில ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன.ஆனால் அதற்கு அடுத்த நாளே அது பற்றிய செய்திகளை காணமுடியவில்லை.
அது மறக்கடிக்கப்பட்டதா, மறைக்கப்பட்டதா, சதிகாரர்கள் யார், இது போன்ற முக்கிய விஷயங்களில் நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் ஆதங்கம். சிறுபான்மை மக்களின் மீது அக்கறை காட்டி வரும் பிரதமர், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடுக்கான பரிந்துரையினை வழங்கிய ரங்கநாத் மிஸ்ரா ஆனையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைபடுத்த இந்தக் கூட்டத் தொடரிலேயே ஆவன செய்ய வேண்டும்.
மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் விரைந்து நிறைவேற்றி விட வேண்டும் என்பதே இந்திய மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நன்றி – மக்கள் உரிமை வாரஇதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக