அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 3 மார்ச், 2010

குடி வளர்ப்பதில் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி!


அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தான் டாஸ்மாக் சாராயக் கடைகள் தொடங்கப்பட்டன.முன்னதாக மிடாஸ் என்ற பெயரில் ஜெயலலிதாவின் உற்றதோழி சசிகலா சாராயத் தொழிற்சாலையைத் துவங்கி இருந்தார்.
அவற்றை அரசாங்கமே விற்பதற்காகத்தான் டாஸ்மாக்கும் தொடங்கப்பட்டது. இப்போதும் சசிகலாவின் மிடாஸில் தான் அரசு கொள்முதல் செய்கிறது. தி.மு.க அரசின் சாராய வணிகம் சாதாரண மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூயதென்றாலும், எதையெல்லாமோ கண்டித்துப் போராடும் அ.தி.மு.க இதை கண்டிப்பது இல்லை.கண்டுகொள்வதும் இல்லை. ஆட்சியில் அ.தி.மு.க இருந்தாலும், தி.மு.க இருந்தாலும் சாராய சாம்ராஜ்யத்தின் சல்லிவேரைக்கூடக் கிள்ள முடியவில்லை.
வேர்கள் ரகசியமாய் சந்தித்துக் கொள்வதை அறியாமல், கிளைகள் மோதிக் கொள்கின்றன என்பார் கலைஞரின் ஆஸ்தான கவிஞரான அப்துல் ரகுமான். இது தி.மு.க.,அ.தி.மு.க.வுக்கு அப்படியே பொருந்துகிறது.
நன்றி – மக்கள் உரிமை வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக