
கோவா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு குழு, குண்டுவெடிப்பு தொடர்பாக சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயந்த் அதாவலேயிடம் விசாரணை செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கோவாவில் இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்த போது அதில் வைத்திருந்த குண்டு வெடித்து இருவரும் பலியாகினர். தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுது வெடிகுண்டு வைத்து அதனை முஸ்லிம்கள் வைத்ததாக திசைதிருப்பி இந்து-முஸ்லிம் கரவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அக்குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தது பின்னர் விசாரணையில் வெளியானது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் இச்சதித் திட்டத்தைத் தீட்டி குண்டு தயார் செய்திருந்தது சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா அமைப்பு என்பதும் வெளியானது. இச்சதித்திட்டம் மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் தீட்டப்பட்டதால் கோவா குண்டு வெடிப்பு தொடர்பான மேல் விசாரணை தேசிய புலனாய்வு குழு(என்.ஐ.ஏ) விடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட நான்கு தீவிரவாதிகளில் தனஞ்செய் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரையும் அழைத்துக் கொண்டு சனாதன் சன்ஸ்தா அமைப்பின் நிறுவனர் அதாவலேயின் வீட்டில் சென்று அவரிடம் தேசிய புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. சனாதன் சன்ஸ்தாவின் மேலாண்மை ட்ரஸ்டியான விரேந்திர மராத்தேயிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதாவலேயின் தலைமையில் இயங்கும் அவருடைய ஆசிரமத்திலும் தேசிய புலனாய்வு குழு சோதனை நடத்தியது. இச்சோதனையில் சி.டிக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரமத்திலுள்ள கணினி சர்வர், மற்றும் இதர கணினிகளின் ஹார்ட் டிஸ்குகளையும் கணினி வல்லுநர்கள் பரிசோதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக