அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 26 மே, 2010

அரசு பள்ளியில் படித்து முதலிடம் வந்ததில் மகிழ்ச்சி: மாணவி ஜாஸ்மின்

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வில் நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நெல்லை எம்.பி.எல். அரசு பள்ளி மாணவி இவர் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.



ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூது வீடுகளுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அம்மா நூர்ஜகான், சகோதரர்கள் இம்ரான் இப்ராகிம், இர்பான். இவர்கள் திருநெல்வேலி டவுண், கல்லணைத் தெருவில் வசித்து வருகின்றனர்.



பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின், ‘’ மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு எனது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கமே அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணம்.



அதிக பணம் அளித்து பெரிய பள்ளியில் படிக்காமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து, வெற்றி பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.எனது அடுத்த முயற்சி ஐஏஎஸ் படித்து ஏழை, எளிய மக்களுக்கும், பொது மக்களுக்கும் சேவை செய்வதே நோக்கமாகும்’’ என்று தெரிவித்தார்.


nadri - nakkeeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக