சென்னை -
தமிழகத்தில் சட்டமன்ற மேல்-சபை தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலர் ஒருவரை தமிழக அரசு நியமித்து உள்ளது. சட்டப்பேரவை செயலகத்தில் இணை செயலாளராக பணிபுரிந்து வரும் ஜமாலுதீன் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் எம்.செல்வராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது :-
தேர்தல் துறையுடன் இணைந்து....
தமிழகத்தில் மேல் - சபை அமைப்பதற்கான பணிகள் தொடர்பாக ஒரு சிறப்பு அலுவலர் பதவியை உருவாக்க முடிவு செய்ய்ப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவை செயலகத்தில் உள்ள சில அதிகாரிகள் அவருக்கு உதவிகரமாக இருப்பதருக்காக நியமிக்கபடுவார்கள். மேல் - சபை தேர்தலுக்காக, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ கோட்பாட்டுக்கு இணங்க ஒற்றை மாற்று வாக்குமுறைப்படி தேர்தல் நடத்துவது போன்றவை தொடர்பாக, பொது (தேர்தல்) துறையுடன், ஒருங்கிணைப்பு பணிகளை, இந்த சிறப்பு அலுவலர் மேற்கோள்வார்.
சிறப்பு அலுவலர்
இந்த தற்காலிக பனிஇடத்தில், நியமிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு காலத்துக்கு அல்லது தேவை நிறைவடையும் வரை, இதில் எது குறைவோ அந்த காலம் வரை இப்பதவியில் சிறப்பு அலுவலர் நீடிப்பார்.
சிறப்பு அலுவலராக, தமிழக சட்டபேரவை செயலக இணை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி, இணை செயலாளர் அந்தஸ்த்துக்கு சமமானது. சிறப்பு அலுவலருக்கு துணை புரியக்கூடிய அதிகாரிகள் நியமனம் தொடர்பான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக