அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 23 மே, 2010

முத்துப்பேட்டை அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

முத்துப்பேட்டை


முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் அண்ணாத்துரை (வயது நாற்ப்பத்தி ஐந்து) கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று மதியம் உப்பூர் புதுரோடு அருகே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது மன்னர்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த செங்கல் ஏற்றிய லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அண்ணாத்துரை வந்த சைக்கிள் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர் விபத்தில் உடல் நசுங்கி சம்பவைடத்திலேயே அண்ணாத்துரை பலியானார்.




இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்திரைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அண்ணாத்துரைக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.



நன்றி - தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக